Sunday, June 29, 2008

1. தஞ்சை பெரிய கோவில் கோபுரம்



வியக்க வைக்கும் கட்டிட கலை என்ற தலைப்பை முடிவு செய்ததுமே என் கண்முன் தோன்றிய முதல் கோவில் நமது தஞ்சை பெரிய கோவில்.

தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு அம்சமே அதன் ஒற்றை கல் கோபுரமும், பெரிய கோவில் நந்தி என்று அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சை கோவில் நந்தியும்தான்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிருகதீசுவரர் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலின் விமான கோபுரம் 216 அடி ஆகும். கூம்பு போன்ற வடிவமுடைய கோவில்களில் இதுவே உயரமான கட்டமைப்பு ஆகும்.
அந்த கூம்பு அமைப்பு சுமார் 81.25 டன் எடை உடையது ஆகும்.
இந்த ஒற்றை கல்லால் செய்யப்பட கோபுர கூம்பை எடுத்து செல்ல அந்த காலத்திலேயே நாலு மையில் நீளத்திற்கு சாரம் கட்டப்பட்டதாம். சாரம் ஆரம்பம் ஆனா ஊரை இன்றும் சாரங்கட்டி (அல்லது) சாரபள்ளம் என்று மக்கள் அழைகின்றனர். 81.25 டன் எடை கொண்ட அந்த கல்லை சாரத்தின்
மீது உருட்டி சென்று கோபுரத்தின் மேல் வைத்ததாக வரலாறு சொல்கிறது.

கோபுரத்தின் மீது இருக்கும் கலசம் 12.5 அடி உயரமுடயதகும். 9.25 எடையுள்ள செம்பாலான கலசத்தின் மீது சுமார் 800 கிராம் தங்கத்தால் முலாம் பூசபட்டுள்ளதாம்.

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடரும்...

No comments:

Post a Comment