Thursday, July 29, 2010

என் பார்வையில்...

அலுவலக பணி காரணமா கொஞ்ச நாளா இந்த பக்கம் வர முடியல (அட உண்மைதாங்கப்பா). நடுவுல கிடைச்ச ஓய்வு நேரத்துல ஆண்டவன் அருளால(என்ன பண்றது நெலம அப்படி) சில நல்ல படங்கள பார்த்தேன். அத பத்தித்தான் இந்த பதிவு.

களவானி

Kalavani

பசங்க விமல் நடிச்சதால படத்த பாக்கணும்னு முன்னாலேயே முடிவு பண்ணியாச்சு. இந்த படதுலயும் நம்ம மீனாட்சி அசத்திட்டாரு. நடிப்பு ரொம்ப இயல்பா இருந்துச்சு. புதுப்பொண்ணு ஓவியா ரொம்ப அழகு. அந்த வில்லன் யாருன்னு தெரியல, ஆனா சூப்பர். ஆவணி முடிஞ்சா என் பையன் டாப்பா வருவான்னு சொல்றத அம்மாவா வந்த சரண்யா டாப்பா பண்ணிருந்தாங்க. மொத்ததுல வெட்டு, குத்து, ரத்தம் இல்லாம ஒரு கிராமத்துக் கதை. இரண்டறை மணி நேரம் நம்மல உக்கார வச்சிடுராங்க.

Inception

inception

பயபுள்ளைக எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்கன்னு தெரியல. கனவுல புகுந்து நம்ம கிட்ட இருக்குற எண்ணங்களை மாத்துறத பத்திதான் கதையாம். நமக்கு தெரிஞ்ச ஒரே மூஞ்சியே டைட்டானிக் லியானர்டோதான். படம் ரொம்ப நல்லா இருந்துச்சு. கிராபிக்ஸ்- சொல்ல தேவையேயில்லை, அசத்திட்டாங்க. அதுவும் அந்த நகரமெல்லாம் மடங்குறாப்புல ஒரு சீன்ல அவ்வளவு பெர்பெக்ஸன். கனவுகளையும், அதுல ஏற்படும் லாஜிக்குகளையும் விவரிக்கும் போது சூப்பர். படத்த கண்டிப்பா தீயேட்டர்லதான் பாக்கணும்.

The Karate Kid

df-27222_rtop

இந்த படத்தை நேத்துதான் பார்த்தேன். Attitude-ங்குறது எந்த அளவுக்க்கு முக்கியம்னு ஒரு சில சீன்களில் அழகாக விவரிச்சிருக்காங்க. ஜேடன் சிமித், அவன் சொந்த நாட்டுக்கு போகனும்னு அழும் போது ரொம்ப இயல்பு, ஜாக்கி சானிடம் martial arts கற்றுக்கும் போது அதிரடி. ஜாக்கிசானுக்கு ஒரே ஒரு சண்டை சீன் தான், ஏன்னா இதுல ஜேடன் தான் ஹீரோ. நிச்சயமா இந்த படத்தைப் பார்க்கலாம்.

Wednesday, July 14, 2010

ஞாயிற்றுக்கிழமை... மகதீரா....

கடந்த ஞாயிறு அன்று என்ன செய்வது என்று தெரியாமல், நண்பர்களிடம் இருந்து வாங்கி வந்த CD-களில் இருந்த மகதீரா என்ற தெலுங்கு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். அதுல எந்த தமிழ் படமும் இல்லை, ஆங்கிலத்தில் பார்த்த படமே இருந்ததால் கேபிளார் நல்ல review comments கொடுத்த இந்த படத்தை பார்த்தேன்.

Magadheera_poster

தெலுங்குனாலே மசாலா படம்தான் எடுப்பாங்கன்னு நெனச்சிருந்தேன். இந்த படமும் மசாலா படம்தான். ஆனால் மனமிக்க மசாலா. அதுலயும் graphics-ல மெரட்டிருந்தாங்க. ஒரிஜினல் சிடிங்கறதால சவுண்டும், படமும் மிகவும் நன்றாக இருந்தது. இந்த படத்தை தியேட்டர்ல பாக்கம தவற விட்டோமேன்னு நெனச்சு வருத்தப்பட்டேன்.

படத்துல முக்கியமா இரண்டாவது பாதியில வர அந்த நானூறு ஆண்டுகளுக்கு முந்திய கதை பகுதி மிக நேர்த்தியா கிராபிக்ஸ் பண்ணிருக்காங்க. காஜல் அகர்வாலை அவ்வளவு அழகாக காட்டி இருந்தாங்க. கிராபிக்ஸில் நிறைய மெனக்கெட்டிருந்தாங்க.

ஹீரோ, நூறு பேருடன் சண்டை செய்யும் போர்சன் மிக அருமை. இந்த படத்தை ஏன் தமிழை டப் பண்ணாம விட்டாங்கன்னு தெரியல. அல்லது தமிழ் உரிமையை யாராவது வாங்கிருக்காலாம். இதை தமிழில் ரீமேக்குகிறேன் என்று கெடுக்காமல் இருந்தால் சரி.

Friday, July 9, 2010

நண்பரின் கவிதை... - பாகம் 2

2592840035_a3462f2e09

தூசு தட்டிய புத்தகத்தில் கிடைத்த மற்றொரு கவிதை, உங்கள் பார்வைக்காக,

கைக்கெட்டாமல் நீ, காதல்
கரைசேராமல் நான்,
கரையும் கண்களுக்கு, உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில், என்
விழிகளில் நீ...

Wednesday, July 7, 2010

நண்பரின் கவிதை...

True_Love_Forever2C_Red_Rose

பணி நிமித்தமாக சென்னையில் இருந்து பெங்களூர் மாறியதும், எனக்கு அடைக்கலம் கொடுத்தது இங்கு இருக்கும் என் பள்ளி நண்பர். சென்ற வாரம் நாங்கள் புது வீடு மாறினோம். வீட்டை மாற்றும் போது கிடைத்த ஒரு  நோட்புக்கில் எழுதியிருந்த சிறிய கவிதை.

போகும் வழி எல்லாம் பூவாய் மாற்றினாய்,
என் நெஞ்சிலோ முள்ளாய் குத்தினாய்,
முள் குத்தி குருதி வரவில்லை,
என் நெஞ்சில் காதல் வந்தது.

இந்த கவிதை என் நண்பர் ஒருவர் எழுதியதே. இந்த மாதிரி பழைய நினைவுப் புதையல்கள் நிறைய இருந்தன. எதுவும் சுவாரசியமாக இருந்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

Friday, July 2, 2010

சோசியல் நெட்வொர்க்ஸ்

social_networking_sites

ஃபேஸ் புக், ஆர்குட் என்று
நட்பு வட்டங்கள்
நான்கு கட்டங்களில்
சுருங்கியதென்னவோ...

ட்வீட்டர், பஸ்-வும் சேர்ந்து
தோளோடு தோளாய்
இருந்தவர்களை
தொலைவில் நிறுத்தி
வைத்தென்னவோ...

Gtalk-ம், Skype-ம் சேர்ந்து
கண்களால் பேசிய
காதலர்களை
கைகளால் பேச
வைத்தென்னவோ...