Tuesday, April 21, 2009

SMS கவிதை - உண்மையான நட்பு

Friendship

காரணம் இல்லமால் கலைந்து போக

இது கனவு இல்லை

காரணம் சொல்லி பிரிந்து போக

இது காதல் இல்லை

உயிர் உள்ளவரை தொடரும்

உண்மையான நட்பு

மூன்று விரல் - புத்தகம்

8183680739

”மென்பொருள் துறை சார்ந்து தமிழில் வெளியாகும் முதல் நாவல்” என்ற அடைப்புக்குள் இருக்கும் வார்த்தையை பார்த்தவுடன் இந்த நாவலில் அப்படி என்ன தான் நான் இருக்கும் துறையை பற்றி எழுத்தாளர் சொல்லியிருக்கிறார் என்று அறிந்து கொள்ள நினைத்தேன். பின்பு இந்த புத்தகத்தை பற்றி சக வலைப்பூ நண்பர்கள் அளித்த விமர்சனங்களை(எழுத்தாளரை திரு.சுஜாதா அவர்களின் வாரிசு என்று குறிப்பிட்டுருந்தது) படித்த பின் இந்த புத்தகத்தை படிக்க மேலும் ஆர்வம் அதிகரித்தது.

நேற்று இந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்துவிட்டேன். வெகு சீக்கிரத்திலேயே படித்து முடித்து விடுவேன் என்று தோன்றுகிறது.

கூடிய விரைவில் இந்த புத்தகத்தை பற்றி எழுதுகிறேன்.

Friday, April 17, 2009

ஆனந்த தாண்டவம்

anandha_thandavam_tamana_30408_11

பொருளாதார மந்த நிலை காரணமாக சில அநாவசிய செலவுகளை தவிர்த்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் நல்ல படங்களையும், எதிர் பார்ப்புகள் அதிகம் நிறைந்த படங்களையும் நான் சென்னை சத்யம் திரை அரங்கில் சென்று பார்ப்பதுண்டு. நல்ல படங்களை நல்ல சூழலில் நல்ல quality-ல் பார்க்க வேண்டும் என்ற காரணமேயாகும்.

சுஜாதா அவர்களின் கதை என்ற ஒரு காரணத்துக்காக சமீபத்தில் வெளியான ஆனந்த தாண்டவம் படத்தை பார்க்க சென்னை சத்யம் திரை அரங்கிற்க்கு சென்றேன்.

நான் மட்டும் அல்ல, அங்கு வந்திருந்த அனைவரும் அதே காரணத்திற்க்காக வந்திருந்தார்கள் என்பது புலப்பட்டது.

சரி படம் பத்தி சொல்லனும்னா, ஒரு நாவலை ஒரு பக்கம் விட்டு ஒரு பக்கம் படித்தது போன்ற உணர்வு. படம் நம்மை எங்கே கொண்டு செல்கிறது என்று கடைசி வரை புரியவில்லை.

ஹீரோவிற்கு எப்போது நடிப்பு வரும் என்று எதிர் பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

படம் பார்த்து விட்டு திரும்பி வரும் போது என் மனசாட்சி சொன்னது “உன் வாழ்க்கையிலே நூறு ரூபாயும், மூன்று மணி நேரமும் இப்படி வேஸ்ட் பண்ணிடியேடா, பாவி !!!”

மறந்து விடாதே...

        colorswathi1

என்னை மறக்க வேண்டும் என்று

நினைக்கும் ஒவ்வொரு நிமிடமும்

என்னைத்தான் நினைக்கிறாய் என்பதை

மறந்து விடாதே...

Tuesday, April 14, 2009

பொன்னியின் செல்வன்

நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் தமிழ் புத்தகம் - அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்.

அவர் எழுதிய பார்த்திபன் கனவு புத்தகத்தை படித்து முடித்த பின் அவர் எழுத்துக்களின் மீது கொண்ட ஆர்வத்தினால் இப்போது இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த புத்தகம் 5 பாகங்களை கொண்ட ஒரு பெரிய படைப்பாகும்.

பார்த்திபன் கனவு படிப்பதற்கு முன் இந்த புத்தகத்தை வாங்கி விட்டபடியால், முதலில் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். முதல் பாகம் படிக்கும் பொழுது இதன் மீது அவ்வளவாக ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. சிரிய புத்தகங்களேயே படித்து பழக்கப்பட்ட எனக்கு இப்பெரும் படைப்பை படிக்க சற்று சோம்பேரித்தனமாகத்தான் இருந்தது. அதனால் நான் படிக்க ஆரம்பித்த முதல் நான்கு நாட்களிலே என் ஆர்வம் குறைந்து படிப்பதை பாதியிலேயே விட்டு விட்டேன்.

பார்த்திபன் கனவு புத்தகம் சிரியதாக இருந்ததால், அதை என்னால் சுலபமாக படிக்க முடிந்தது. கல்கி அவர்களின் எழுத்துக்களை படிக்கும் பொழுது என்னை அறியாமலேயே வரலாறுகளின் மீது எனக்கு மிக்க ஆர்வம் ஏற்பட தொடங்கியது.

இப்போது அந்த ஆர்வத்தின் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் வரலாற்றுப்புதினத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். (இந்த பதிப்பை எழுதும் போது நான் நான்காம் பாகத்தின் இறுதியில் இருக்கிறேன்). கதைக் கள அமைப்பும் அவர் விவரிக்கும் பாங்கும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. நண்பர்களுக்கு நேரமிருந்தால் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கவும்.

பொன்னியின்_செல்வன்

Monday, April 13, 2009

49 O என்னும் பிரம்மாஸ்திரம்...

ballot_box_2

கடந்த மூன்று வாரங்களாக திரு.  ஞானி அவர்கள், தன்னுடய ஓ பக்கங்களில் வலியுறுத்தி வரும் 49 ஓ என்னும் வேட்பாளர் நிராகரிப்பு ஓட்டை வாக்கு சாவடிகளில் எப்படி பதிவு வேண்டும் என்பதைப் பற்றிய பதிவு.

”வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்லவேண்டும். உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே  நோட்டில், அந்தக் கையெழுத்தின்  பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இதுதான் 49 ஓவைப் பதிவு செய்யும் முறை.

இதைச் செய்யக் கூடாது என்று நம்மை யாரும் & சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரதிநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.

தனியே போய் சாவடியில் பகிரங்கமாக 49 ஓ பதிவு செய்ய தயக்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வாக்குச் சாவடியில் 49ஓ பதிவு செய்ய விரும்பும் இதர நண்பர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் சந்தித்து ஒன்றாகப் போய் வரிசையில் நின்று 49 ஓ பதிவு செய்யுங்கள்.”

தேர்தலில் நிற்க்கும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தயவு செய்து வீட்டிலேயே முடங்கி இருக்காமல், தவறாமல் 49 ஓ பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி - திரு.  ஞானி அவர்கள் அவர்களுக்கு.

இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

http://www.gnani.net/