Tuesday, February 12, 2013

iSriSays – IMDB

imdb

Recently, started using IMDP app for iPad. Comparing to the iPhone version of the same, it comes with revamped user interface. This version with new interface was released recently. You can download this app in iTunes AppStore.

It comes with so much information and details on movies, celebrities, reviews from critics and users., etc. And the best part is everything packed in perfect combo and incorporated in to a single screen. No need to tap and traverse through so much buttons to access desired info. Rating a movie, adding reviews and sharing your comments in your social timeline is built up well and working with native iOS sharing.

It is a must have app for movie lovers who owns an iPad, to explore new movies based on their interests. You will definitely love the user interface experience which even makes you to start hating regular web UI.

Enjoy it.

Thursday, May 10, 2012

4G எனும் மாயை…

 

ஏர்டெல் 4ஜி-யை பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. 100Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்க உள்ளது. அவர்கள் அறிவித்துள்ள வசதி ரூ.999 ஆரம்பிக்கிறது. இந்த இணைப்பு வசதிக்கு நாம் 6ஜிபி அளவிலான டேட்டாவை 100Mbps வேகத்தில் பெறலாம், அதற்குப் பிறகு இணையவேகம் அதளபாதாளமான 128Kbps-க்கு சென்று விடும்.

4g

இந்த விளம்பரத்தைப் பற்றி இணையத்தில் படித்த போது, அதில் ஒரு கமெண்ட் பார்க்க மிக நகைப்புக்கூரியதாகவும், யோசிக்க வைப்பதாகவும் இருந்தது. இதோ அது,

“இந்த இணைய இணைப்பு ப்ளான் எப்படி உள்ளதென்றால் உங்களிடம் உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய ஒரு காரைக் கொடுத்து, அதில் ஒரு லிட்டர் பெட்ரோலே ஒரு மாததிற்கு நிரப்பப்படுமென்றும், நீங்க அதிக வேகத்தில் மூன்று கி.மீ மட்டுமே செல்லமுடியுமென்றும் சொல்வது போலுள்ளது”

மிக யோசிக்க வைக்கும் கமெண்ட். இந்தியர்கள் விரும்புவது, அதிவேகமான இணையம் என்பதைவிட, FUP (Fair Usage Policy) இல்லாத இணையம். இதை இன்னும் ISP-க்கள் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கின்றனரா என்பது தெரியவில்லை.

பாமரர்களும் உபயோகிக்க ஆரம்பித்துவிட்ட வேளையில், FUPயை எடுத்தால் இணையம் இன்னும் நிறைய பேரை சென்றடைய வாய்ப்புள்ளது.

வந்தேவிட்டார் சுஜாதா… 16 நாளில்

 

உயிர்மை பதிப்பகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த (கொடுமையான) அனுபவத்தை பகிரவே இந்த பதிவு.

அது ஒரு செவ்வாய்கிழமை. ஒரு பதிவில் சுஜாதா அவர்கள் எழுதிய குறுநாவல்களை நான்கு பாகங்களாக உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர் என்று படித்தேன். நான் பெங்களூரில் வசித்து வருவதால், தமிழ் புத்தகங்கள் இங்கு அனைத்து கடைகளிலும் கிடைக்காததாலும், உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள சுஜாதா அவர்களின் குறுநாவல்களில் மூன்று மற்றும் நான்காம் பாகங்களை(கணேஷ் வசந்த்) ஆன்லைனின் கடந்த 24-ஏப்ரல்-2012-ல் ஆர்டர் செய்தேன். அதில் ஆர்டர் செய்த ஆறுநாட்களில் கையில் கிடைத்துவிடும் என்று போட்டிருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு…

ஒரு வாரகாலமாகியிம் புத்தகங்கள் என் கையில் கிடைத்தபாடில்லை. அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைத்தபோது புத்தகம் திங்கள்கிழமைதான்(30-ஏப்ரல்-2012) அனுப்பியுள்ளதாகவும் இன்னும் ஓரிருநாளில் கிடைத்துவிடும் என்று சொன்னார். குறிப்பாக புத்தகம் ரெஜிஸ்தார் தபாலில் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். (அப்பொழுது என் மனதில் எழுந்த ஒரு கேள்வி, ரெஜிஸ்தார் தபால்கள் ஆன்லைன் மூலம் டிராக் செய்யமுடியுமா ?)  இருந்தும் அவரிடம் ரெஜிஸ்தார் தபாலை டிராக் செய்ய ஏதேனும் எண்கள் இருந்தால் தாருங்கள் என்று கேட்டதற்கு அதுபோல் எதுவுமில்லை, இன்னும் ஓரிருநாளில் உங்கள் கைக்கு புத்தகம் வருமென்றார். சரி பொறுத்திருப்போம் என்றிருந்தேன்.

அந்த வாரமும் கடந்தது(புதன், வியாழன், வெள்ளி, சனி ஒவ்வொரு நாளும் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஞாபகப்படுத்துவதே என் வேலையாய் இருந்தது…), என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா… அதற்கு பிறகு திங்கள் கிழமை(7-மே-2012) அவர்களுக்கு தொலைபேசி செய்து அந்த ஆர்டரை கேன்சல் செய்துவிடுமாறு கூறினேன். இல்லையென்றால் பேங்கில் நானே பேசி அந்த பணப்பகிர்வை கேன்சல் செய்ய சொல்லிவிடவா?(எப்படி செய்வதென்று தெரியாமல்) என்று சொன்னதற்கு, இன்னும் ஏன் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று தெரியவில்லை, நாங்கள் கூரியர் மூலம் உங்களுக்கு அனுப்பிவிடுகிறோம் என்றார்கள் (இத முன்னமே செய்திருக்கலாமே). பிறகு கூரியர் அனுப்ப இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் ஏன் என்று தெரியவில்லை. இறுதியாக இன்று(10-மே-2012) மதியம் கூரியர் வந்தது.

ஒரு காக்கி பேப்பரில் புத்தகத்தை சுற்றி அனுப்பிருந்தார்கள், புத்தகம் மழையால் பாதிக்கப்படக்கூடியது, அதை ஒரு பாலித்தீன் கவரில் போட்டாவது கூரியரில் அனுப்பிருக்கலாம். அது புத்தகம்தான என கூரியர்காரர்கள் சரிபார்க்க அதையும் கிழிந்திருந்தார்கள் (என்ன கொடுமை சார் இது?). ஏதோ நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் புத்தகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்த அனுபவத்தில் எனக்கு மனதில் தோன்றிய சில கேள்விகள்.

1. ரெஜிஸ்தார் தபாலை டிராக் செய்ய முடியுமா ? (நண்பர்களுக்கு தெரிந்தால் பின்னூட்டதில் பகிரவும்)

2. மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அரசு நிறுவனம் கூரியர்காரர்களுடன் போட்டி போடுமளவுக்கல்லவா இருக்க வேண்டும் ? (இன்னும் அந்த ரெஜிஸ்தார் தபால் எங்குள்ளது என்பது தெரியவில்லை)

3. உயிர்மை பதிப்பகத்தார் இதுபோன்ற எத்தனையோ அனுபவங்களை சந்தித்திருக்கக்கூடும், இருப்பினும் அவர்கள் ஏன் கூரியருக்கு மாறவில்லை ?

4. ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரு வங்கி பகிர்வை எப்படி கேன்சல் செய்வது (ஒழுங்காக பொருள் கிடைக்காத பட்சத்தில்) ? (நண்பர்களுக்கு தெரிந்தால் பின்னூட்டதில் பகிரவும்)

இதன் மூலம் நான் கற்ற பாடம், இனிமே ஆன்லைனில் ஆர்டர் செய்வே ???