Monday, June 30, 2008

வியக்க வைக்கும் அறிவியல் விஷயங்கள்




நண்பர்களே,

இந்த உலகில் நம்மை அறியாமல் எத்தனையோ கோடிக்கணக்கான விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒரு சிறு துளியாக நான் படித்து வியந்த விஷயங்கள் உங்கள் பார்வைக்கு.
  1. பூமியில் இருந்து நம் கண்ணுக்கு தெரிகின்ற நட்சத்திரங்களில் அதிக தொலைவான நட்சத்திரம் அன்றோமேடா பால் வீதியில் அமைந்துள்ளது. அதன் தூரம் சுமார் 15 லட்சம் ஒளி ஆண்டுகள்
  2. உலக மக்கள் இரண்டாவது அதிகமாக உபயோகப்படுத்தும் உலோகம் தாமிரம்
  3. நமது கழுத்திலிருக்கும் அயோட் (Hyod) என்ற எழுப்பு துண்டு நமது உடலின் உள்ள மாற்ற எந்த எலும்பு பகுதியோடும் இணைப்பு இல்லாமல் அமைந்துள்ளது.
  4. ஒரு துண்டு காகிதத்தை அதிகபட்சம் ஏழு முறை பாதியாக மடிக்கலாம் .
  5. யானைகள் நின்று கொண்டே இறந்தால், அதன் உயிர் பிரிந்த பின்பும் அவை நின்று கொண்டே இருக்கும்
  6. மிளகாய்க்கு எந்த வகை சுவையும் கிடையாது. அவற்றை சாப்பிடும் பொழுது ஏற்படும் நரம்பு எரிச்சலே அதன் சுவை
  7. உலகில் ஆண்கள் இனத்தில் கடல் குதிரை மட்டுமே முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும்
  8. ப்ளூ வேல் (Blue Whale) எனப்படும் ஒரு வகை கடல் மீனின் நாக்கு ஒரு யானையின் அளவுடையதாகும்.
  9. யானையின் துதிக்கையில் ஒரு எலும்பு துண்டு கூட கிடையாது, ஆனால் அதன் துதிககை 4000 தசைகளால் ஆனது.
  10. ஒட்டகத்திற்கு கண்ணில் மூன்று இமைகள் இருக்குமாம்.
தொடரும்...

கவிதைகள் ...



தூறலும் இல்லை மழை சாரலும் இல்லை
ஆனால் நான் மட்டும் நனைந்து போகிறேன் ....
உன் அன்பின் சாரலில்
-------------------------------------------
உன் உள்ளம் நேசிப்பதை
மறந்து விடலாம்
ஆனால் உன்னை நேசித்த
உள்ளத்தை மட்டும்
உன்னால் மறக்க முடியாது
-------------------------------------------
பிரிவு என்பது யாராலும்
மறக்க முடியாத வலி...
நினைவு என்பது யாராலும்
திருட முடியாத பரிசு...
-------------------------------------------
அலைகள் எனது ஆசான்கள்
விழுந்து எழுவதால் அல்ல
ஒவ்வொரு முறை விழும் போதும்
தவறாமல் எழுவதால்
-------------------------------------------

Sunday, June 29, 2008

சிரித்து வாழ வேண்டும்


வடிவேல் : என் பொளப்புல மண்ண வாரி போட கெளம்பிட்டங்கய்யா !!!
நிருபர் : ஏன் என்ன ஆச்சு ?

வடிவேல் : ஆமாம் , விஜய் தம்பி இப்போல்லாம் action-ங்கற பேர்ல காமெடி பண்றார்
------------------------------------------------------------------------------
அப்பா : டேய் ஏன்டா எக்ஸாம் எழுத போகல ?
மகன் : கொஸ்டின் ரொம்ப கஷ்டமா இருக்குப்பா

அப்பா : அத எப்படி இங்கே இருந்துடே சொல்ற ?
மகன் : நேத்தே கொஸ்டின் அவுட் ஆயிடுச்சுப்பா
------------------------------------------------------------------------------
மந்திரி: என்ன அருமையான பாட்டு, ஏன் இத யாரும் இன்னும் ரீமிக்ஸ் பண்ணல ?
தொண்டன் : சும்மா இருங்க தலைவா இது தேசிய கீதம்
------------------------------------------------------------------------------

அம்மா என்றொரு கவிதை



எனக்கு காய்ச்சல்
ஆனால் நெருப்பாய் கொதிக்கும்
அவள் மனசு !!!

1. தஞ்சை பெரிய கோவில் கோபுரம்



வியக்க வைக்கும் கட்டிட கலை என்ற தலைப்பை முடிவு செய்ததுமே என் கண்முன் தோன்றிய முதல் கோவில் நமது தஞ்சை பெரிய கோவில்.

தஞ்சை பெரிய கோவிலின் சிறப்பு அம்சமே அதன் ஒற்றை கல் கோபுரமும், பெரிய கோவில் நந்தி என்று அனைவராலும் அழைக்கப்படும் தஞ்சை கோவில் நந்தியும்தான்.

தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிருகதீசுவரர் கோயில் தஞ்சாவூரிலுள்ள இந்து சமயக் கோயிலும் உலகப் பாரம்பரியச் சின்னமும் ஆகும். இக்கோயில், 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது.

தஞ்சை பெரிய கோவிலின் விமான கோபுரம் 216 அடி ஆகும். கூம்பு போன்ற வடிவமுடைய கோவில்களில் இதுவே உயரமான கட்டமைப்பு ஆகும்.
அந்த கூம்பு அமைப்பு சுமார் 81.25 டன் எடை உடையது ஆகும்.
இந்த ஒற்றை கல்லால் செய்யப்பட கோபுர கூம்பை எடுத்து செல்ல அந்த காலத்திலேயே நாலு மையில் நீளத்திற்கு சாரம் கட்டப்பட்டதாம். சாரம் ஆரம்பம் ஆனா ஊரை இன்றும் சாரங்கட்டி (அல்லது) சாரபள்ளம் என்று மக்கள் அழைகின்றனர். 81.25 டன் எடை கொண்ட அந்த கல்லை சாரத்தின்
மீது உருட்டி சென்று கோபுரத்தின் மேல் வைத்ததாக வரலாறு சொல்கிறது.

கோபுரத்தின் மீது இருக்கும் கலசம் 12.5 அடி உயரமுடயதகும். 9.25 எடையுள்ள செம்பாலான கலசத்தின் மீது சுமார் 800 கிராம் தங்கத்தால் முலாம் பூசபட்டுள்ளதாம்.

தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடரும்...

வியக்க வைக்கும் கட்டிட கலை - கட்டுரை தொடர்

உலகை வியக்க வைக்கும் கலைகளில் தமிழர்களின் கட்டிட கலையும் ஒன்று. அதனால் தான் இன்றும் வெளி நாட்டவர்கள் இந்திய மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோவில்களை காண பெருமளவில் இந்தியாவிற்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இப்படிப்பட்ட கோவில்களை கட்டும் போது எல்லோரையும் வியக்க வைக்கும் வகையிலும், கோவில்களை கட்டுபவரின் பெருமையை என்றும் பறை சார்ட்டும் விதமாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக நமது பண்டை கால மன்னர்கள் பல கட்டிட கலை யுக்திகளை கையாண்டு அரிய சில விஷயங்களை செய்து வைப்பார்.

அப்படி பட்ட விஷயங்கள் அந்த கோவிலின் பெருமையை மேலும் ஒரு படி உயர செய்யும். இது போன்ற விஷயங்களை ஒரு கட்டுரையாக தொகுக்கும் முயற்சியின் முதல் படி இந்த பதிவு.

Saturday, June 28, 2008

கவிதைகள்

பிரிவை தாங்க முடியவில்லை
தயவு செய்து பேசாதே
உதடுகள்....
-------------------------------------------

தவறு என்று தெரிந்தும்
தவிர்க்க முடியாமல் தவிக்கும்
இதயத்தின் ஆசை
காதல்
-------------------------------------------
பூக்கள் மலர்வது
உதிரதான் என்றால்
மொட்டாகவே இருக்கட்டும்
நமது நட்பு.
-------------------------------------------
என் காதலியின் கொலுசு
சத்தம் கேட்டுப் பிறந்த கவிதைகள்
அவளூடைய மெட்டி சத்தம்
கேட்டு இறந்தன !!!
-------------------------------------------

Monday, June 23, 2008

செல் பேசி


நடிகர் வடிவேல் சொல்ற மாதிரி, நானும் ரவுடிதான்னு ஒரு ப்ளாக் ஆரம்பிச்சாச்சு.
ஆனா முதல் பதிப்ப, ப்ளாக் ஆரம்பிக்கிறதுக்கு எடுத்துக்கொண்ட மாதிரி நிறைய டைம் எடுத்துக்காம உடனே எழுதனும்னு நெனச்சு எழுத ஆரம்பிச்சேன்.

நாம எழுதுறது மத்தவங்களுக்கு உதவியாக இருக்கணும்ல, அதனால எனக்கு உருப்படியா தெரிஞ்ச விஷயத்த முதல்ல எழுதுறதுன்னு முடிவு பண்ணி எழுதிருக்கேன்.


நாம
ஒரு செல் பேசி வாங்கனும்னு யோசிக்கும் போது, எந்த மாடல்வாங்கலாம்னு ஒரு பெரிய குழப்பமே ஏற்படும்.

என்னதான் பல கடைக்குள்ளே ஏறி ஏறங்குனாலும், நமக்கு அவங்க காட்டபோறதென்னவோ அழகா pack பண்ணி இருக்குற செல்பேசிகளைத்தான். ஆனாஅதை ஆன்-பண்ணி அதோட நிறை குறைகளை பற்றி அவர்கள் சொல்வதுரொம்ப கஷ்டம்.

ஆனா ஒவ்வொரு செல் பேசியும் மார்கெட்ல அறிமுகம் ஆகும் போது, அதைஅக்கு வேராக ஆணி வேராக அலசி அதோட நிறை குறைகளை சொல்ரதுகுன்னேசில வலை பக்கங்கள் இருக்கு, அதைத்தான் நான் இங்கே கொடுத்துருக்கேன்.

MOBILE REVIEW
GSM ARENA

இனிமே நீங்க புதுசா ஒரு செல் பேசி வாங்கும் போது, இந்த வலை பக்கங்களும்உங்களுக்கு உதவியாய் இருக்கும்-ன்னு நம்பிக்கையுடன் விடை பெறுகிறேன்.

Sunday, June 22, 2008

முதல் வணக்கம்

ப்ளாக் நண்பர்களுக்கு வணக்கம்,

இது வரை சும்மா வந்தோமா படிச்சோமா போனோமா ன்னு இருந்த நான், களத்துலஇறங்கி, எனக்கு தெரிஞ்ச சில விஷயங்கள், நான் பார்த்து, படித்து ரசிச்ச சிலவிஷயங்களை உங்களோட பகிர்ந்துகொள்ளலாம்னு (கொல்லாம இருந்த சரின்னு சொல்றது காதுல விழுகுது...) இந்த blog-a ஆரம்பிச்சிருக்கேன்.

இதற்கு அனைவரின் ஆதரவையும் வேண்டுகிறேன்,

நன்றியுடன்,
ராம்

குறிப்பு:-
நான் இந்த ப்ளாக் ஆரம்பிக்க காரணமாய் (Inspiration) இருந்த ப்ளாக் நண்பர்கள்,

வெட்டிப்பயல்
ஜொள்ளுப்பேட்டை
வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம்
நிலாரசிகன் கவிதைகள்...
யோசிங்க