Thursday, May 10, 2012

4G எனும் மாயை…

 

ஏர்டெல் 4ஜி-யை பெங்களூரில் அறிமுகப்படுத்தியுள்ளது. 100Mbps வேகத்தில் இணைய வசதியை வழங்க உள்ளது. அவர்கள் அறிவித்துள்ள வசதி ரூ.999 ஆரம்பிக்கிறது. இந்த இணைப்பு வசதிக்கு நாம் 6ஜிபி அளவிலான டேட்டாவை 100Mbps வேகத்தில் பெறலாம், அதற்குப் பிறகு இணையவேகம் அதளபாதாளமான 128Kbps-க்கு சென்று விடும்.

4g

இந்த விளம்பரத்தைப் பற்றி இணையத்தில் படித்த போது, அதில் ஒரு கமெண்ட் பார்க்க மிக நகைப்புக்கூரியதாகவும், யோசிக்க வைப்பதாகவும் இருந்தது. இதோ அது,

“இந்த இணைய இணைப்பு ப்ளான் எப்படி உள்ளதென்றால் உங்களிடம் உலகிலேயே அதிவேகமாக ஓடக்கூடிய ஒரு காரைக் கொடுத்து, அதில் ஒரு லிட்டர் பெட்ரோலே ஒரு மாததிற்கு நிரப்பப்படுமென்றும், நீங்க அதிக வேகத்தில் மூன்று கி.மீ மட்டுமே செல்லமுடியுமென்றும் சொல்வது போலுள்ளது”

மிக யோசிக்க வைக்கும் கமெண்ட். இந்தியர்கள் விரும்புவது, அதிவேகமான இணையம் என்பதைவிட, FUP (Fair Usage Policy) இல்லாத இணையம். இதை இன்னும் ISP-க்கள் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரிந்து கொள்ளாதது போல் நடிக்கின்றனரா என்பது தெரியவில்லை.

பாமரர்களும் உபயோகிக்க ஆரம்பித்துவிட்ட வேளையில், FUPயை எடுத்தால் இணையம் இன்னும் நிறைய பேரை சென்றடைய வாய்ப்புள்ளது.

வந்தேவிட்டார் சுஜாதா… 16 நாளில்

 

உயிர்மை பதிப்பகத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த (கொடுமையான) அனுபவத்தை பகிரவே இந்த பதிவு.

அது ஒரு செவ்வாய்கிழமை. ஒரு பதிவில் சுஜாதா அவர்கள் எழுதிய குறுநாவல்களை நான்கு பாகங்களாக உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ளனர் என்று படித்தேன். நான் பெங்களூரில் வசித்து வருவதால், தமிழ் புத்தகங்கள் இங்கு அனைத்து கடைகளிலும் கிடைக்காததாலும், உயிர்மை பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள சுஜாதா அவர்களின் குறுநாவல்களில் மூன்று மற்றும் நான்காம் பாகங்களை(கணேஷ் வசந்த்) ஆன்லைனின் கடந்த 24-ஏப்ரல்-2012-ல் ஆர்டர் செய்தேன். அதில் ஆர்டர் செய்த ஆறுநாட்களில் கையில் கிடைத்துவிடும் என்று போட்டிருந்தார்கள். ஆனால் நடந்ததோ வேறு…

ஒரு வாரகாலமாகியிம் புத்தகங்கள் என் கையில் கிடைத்தபாடில்லை. அவர்களின் தொலைபேசி எண்களுக்கு அழைத்தபோது புத்தகம் திங்கள்கிழமைதான்(30-ஏப்ரல்-2012) அனுப்பியுள்ளதாகவும் இன்னும் ஓரிருநாளில் கிடைத்துவிடும் என்று சொன்னார். குறிப்பாக புத்தகம் ரெஜிஸ்தார் தபாலில் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். (அப்பொழுது என் மனதில் எழுந்த ஒரு கேள்வி, ரெஜிஸ்தார் தபால்கள் ஆன்லைன் மூலம் டிராக் செய்யமுடியுமா ?)  இருந்தும் அவரிடம் ரெஜிஸ்தார் தபாலை டிராக் செய்ய ஏதேனும் எண்கள் இருந்தால் தாருங்கள் என்று கேட்டதற்கு அதுபோல் எதுவுமில்லை, இன்னும் ஓரிருநாளில் உங்கள் கைக்கு புத்தகம் வருமென்றார். சரி பொறுத்திருப்போம் என்றிருந்தேன்.

அந்த வாரமும் கடந்தது(புதன், வியாழன், வெள்ளி, சனி ஒவ்வொரு நாளும் அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஞாபகப்படுத்துவதே என் வேலையாய் இருந்தது…), என் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா… அதற்கு பிறகு திங்கள் கிழமை(7-மே-2012) அவர்களுக்கு தொலைபேசி செய்து அந்த ஆர்டரை கேன்சல் செய்துவிடுமாறு கூறினேன். இல்லையென்றால் பேங்கில் நானே பேசி அந்த பணப்பகிர்வை கேன்சல் செய்ய சொல்லிவிடவா?(எப்படி செய்வதென்று தெரியாமல்) என்று சொன்னதற்கு, இன்னும் ஏன் உங்களுக்கு வந்து சேரவில்லை என்று தெரியவில்லை, நாங்கள் கூரியர் மூலம் உங்களுக்கு அனுப்பிவிடுகிறோம் என்றார்கள் (இத முன்னமே செய்திருக்கலாமே). பிறகு கூரியர் அனுப்ப இரண்டு நாட்கள் எடுத்துக்கொண்டார்கள் ஏன் என்று தெரியவில்லை. இறுதியாக இன்று(10-மே-2012) மதியம் கூரியர் வந்தது.

ஒரு காக்கி பேப்பரில் புத்தகத்தை சுற்றி அனுப்பிருந்தார்கள், புத்தகம் மழையால் பாதிக்கப்படக்கூடியது, அதை ஒரு பாலித்தீன் கவரில் போட்டாவது கூரியரில் அனுப்பிருக்கலாம். அது புத்தகம்தான என கூரியர்காரர்கள் சரிபார்க்க அதையும் கிழிந்திருந்தார்கள் (என்ன கொடுமை சார் இது?). ஏதோ நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் புத்தகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.

இந்த அனுபவத்தில் எனக்கு மனதில் தோன்றிய சில கேள்விகள்.

1. ரெஜிஸ்தார் தபாலை டிராக் செய்ய முடியுமா ? (நண்பர்களுக்கு தெரிந்தால் பின்னூட்டதில் பகிரவும்)

2. மக்களுக்கு சேவை செய்யும் ஒரு அரசு நிறுவனம் கூரியர்காரர்களுடன் போட்டி போடுமளவுக்கல்லவா இருக்க வேண்டும் ? (இன்னும் அந்த ரெஜிஸ்தார் தபால் எங்குள்ளது என்பது தெரியவில்லை)

3. உயிர்மை பதிப்பகத்தார் இதுபோன்ற எத்தனையோ அனுபவங்களை சந்தித்திருக்கக்கூடும், இருப்பினும் அவர்கள் ஏன் கூரியருக்கு மாறவில்லை ?

4. ஆன்லைனில் ஆர்டர் செய்த ஒரு வங்கி பகிர்வை எப்படி கேன்சல் செய்வது (ஒழுங்காக பொருள் கிடைக்காத பட்சத்தில்) ? (நண்பர்களுக்கு தெரிந்தால் பின்னூட்டதில் பகிரவும்)

இதன் மூலம் நான் கற்ற பாடம், இனிமே ஆன்லைனில் ஆர்டர் செய்வே ???

Saturday, May 5, 2012

My views on movies - Avengers (05/05/2012)A movie about super heroes., yeah not constraint to a single one. This time a team of super heroes assembled by SHIELD (Secret agency of USA) with an objective to save the world from some E.T (Extra Terrestrial) as usual. In simple the one line of story(?) seems to boring and very old one, but thats where the super heroes are used.

Even the story seems to be so simple., the making and presentation of the movie bring you to the edge of the seat. Intro scenes of each heroes, contradiction within them, pushing and bringing them into a team are very well portrayed.

Comedy dialogues from Ironman and Hulk was well applauded from audience. Overall all its worth watching and you wont regret.

Friday, May 4, 2012

கலக்கி (04/05/2012)

ஹாலிவுட்:

சென்ற வாரம் பார்த்த படம் “The Incredible Hulk” மற்றும் “Bolt”. அவெஞ்சர்ஸ்(Avengers) படம் பார்க்க நினைத்ததால், அதன் முன்னோடிகளான தோர்(Thor), கேப்டன் அமெரிக்கா (Captain America), அயர்ன் மேன் (Iron Man 1 & 2) படத்தை ஏற்கனவே பார்த்து விட்டதாலும் ஹல்கை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

”The Incredible Hulk” எதிர்பார்த்த அள்வுக்கு நன்றாக இல்லை (பகலில் ஹல்க் சண்டை போடும் காட்சியைத்தவிர). இதற்கு முன் வெளியான ஹல்க் படத்தில் பலவகை கேமிரா கோனங்கள் ரசிக்க வைத்தன. இதில் அந்த நேர்த்தி மற்றும் வேகம் மிஸ்ஸிங்.

“Bolt” ஒரு அனிமேஷன் படம். குங்பூ பாண்டா ஏற்படுத்திய தாக்கம் அனிமேஷன் படங்கள் எனக்கு மிகப்பிடித்த ஒரு Genre-ஆக மாறிப்போனது. அனிமேஷன் படங்கள் பிடிக்கக் காரணமே அதில் இருக்கும் நையாண்டியான வசனங்கள்தான். போல்ட் ஒரு காமெடி படமானாலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒருமுறை பார்க்கலாம்

இணையவேகம்:

நான் எனது கைபேசியில் மாதம் ரூ.100 செலுத்தி 2ஜிபி பெறும் இணைய வசதி வைத்துள்ளேன். நகரத்தில் இருப்பதாலும் அதிகம் எழுத்து சார்ந்த அப்ளிகேஷன்களை உபயோகிப்பதாலும் EDGE கனெக்‌ஷனின் வேகம்(~100Kbps) போதுமானதாக இருந்தது. .

ஆனால் நகரை விட்டு வெளியே செல்ல நேர்கையில் இணைய வேகம் Kmphr-லிருந்து Cmphr-ஆக மாறத்தொடங்கி விடுகிறது. அலைபேசியில் EDGE என்று காண்பித்தாலும் வேகம் எடுக்க என்னவோ மிகவும் தள்ளாடுகிறது இணையம். இம்முறை மிகவும் எரிச்சலாகி கஸ்டமர் கேருக்கும் அலைத்தேன். அவர்களின் ஒரே பதில் EDGE-ன் இணைய வேகம் 10kbps-கிழ்தான் இருக்குமாம். அப்போ GPRS-ன் வேகம் என்ன என்று கேட்டதற்கு அவரிடம் பதிலே இல்லை. பின் அவர் எனக்கு 3ஜி இணையத்தைப் பரிந்துரைத்தார். நான் இருக்கும் நகரில் 3ஜி டவர் இருக்கிறதா என்று அவரிடம் விசாரித்தேன். இல்லை என்றார். பின் எப்படி எனக்கு பரிந்துரைக்கிறீர்கள் என்று கேட்டதறகு மெளனமே பதிலானது.

இணையவேகம் பற்றி இணையத்தில்(அலுவலகத்தில்) தேடியபோது கிடைத்த தகவல்.

இந்தியாவை பொருத்தவரை இருக்கவேண்டிய இணையவேகம்

EDGE – average 135Kbps

GPRS – average 35Kbps

இணையம் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்ட இக்காலத்தில், (இந்தியாவில் மட்டும்) இணைய வசதியை ஏற்படுத்துவதில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறோம்.

புத்தகம்:

சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்கள் ஊரில் இருந்தன. இந்த முறை ஊருக்கு சென்ற பொழுது மின் தடையின் பலனாக (பகலில் மட்டும்) புத்தகம் படிக்க முடிந்தது. அப்படி படித்தது தான் கிழக்குப் பதிப்பகத்தாரின் திரு. ஆர். முத்துக்குமார் எழுதிய ”மகா அலெக்ஸாண்டர்

978-81-8368-637-2_b-500x500

அலெக்சாண்டரின் வரலாறு எளிய நடையில், சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில நேரங்களில் தடம் மாறினாலும் அலெக்சாண்டரைப் பற்றி எல்லா விஷயங்களும் சொல்கிறார். 160 பக்கங்களில் அலெக்சாண்டரின் வாழ்க்கை, வீரம், போர்முறை, அரிஸ்டாடில், மாசிடோனியா, பிலிப் எல்லாரையும் பற்றியும் சொல்வதென்றால் கடினம்தான். இந்த புத்தகத்தைப் படிக்கும்பொழுது கிரேக்க நாகரீகத்திற்கு கிளாடியேட்டர்/300 படமும், அலெக்சாண்டராக ரசல்குரோவும் மனதில் தோன்றியவண்ணம் இருந்தார்கள்

iPhone – என் போன் – 2 (Reeder)

இந்த பதிவுல நான் சொல்லப்போறது Reeder(இது தாங்க கரெக்ட் ஸ்பெல்லிங்) என்கிற ஐபோன் அப்ளிகேஷனைப் பற்றி. இது நான் தினம் பயன்படுத்தும் ஒரு ஐபோன் அப்ளிகேஷன். இதனுடைய பயன்பாடு நம்முடைய கூகுள் ரீடரை ஐபோனுக்கு கொண்டுவருவதே. நீங்கள் அதிகம் கூகுள் ரீடரை உபயோகிப்பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கானது.

1

ss2

இதில் நாம் கூகுள் ரீடரில் பதிந்துள்ள அத்தனை வலைப்பூக்களையும் படிக்கலாம். சில தேவையில்லாத பதிவுகளை வலது புறம் ட்ராக் செய்வதின் மூலம் Mark as Read ஆக மாற்ற முடிவது மிக எளிதில் கையாளக்கூடிய வசதியாகும். பதிவுகளை இடது புறம் ட்ராக் செய்வதின் மூலம் Starred  கட்டளை பிறப்பிக்கலாம்.

நாம் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் பதிவுகளை நம் நண்பர்களுக்கு டிவிட்டர்/ஃபேஸ்புக் மூலமாக பகிரலாம். இத்துடன் மேலும் சில வசதிகளும்(Read it later/Readability etc..,) இதில் உள்ளன.

இதன் முக்கிய உபயோகமாக நான் கருதுவது, நம்மிடம் எப்போதும் அதிவேக இணையம் இருக்கும் என்று சொல்ல முடியாது., நமக்கு அதிவேக இணையவசதி கிடைக்கும் பொழுது (பொதுவாக அலுவலகத்தில்) நாம் அன்றைய வலைப்பதிவுகளை தரவிறக்கும் செய்து, நமக்கு வீட்டில் (இணையவசதி இல்லாதிருப்பினும்) ஓய்வு நேரம் கிடைக்கும் போது படிக்க முடிகிறது.

இதன் விலை $2.99 (அதிகமாகத்தோன்றினாலும் உபயோகமான முதலீடு)

iTunes சுட்டி