Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Thursday, August 19, 2010

என் பார்வையில்…

4a862_madharasapattinam-audio-launch-posters-02

தற்பொழுது படங்களை அதிகமாக பார்க்க முடிவதில்லை. புதிதாக வந்த படங்களில், சில நாட்களாக பார்க்க நினைத்த மெதராஸப்பட்டினம் படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடிந்தது. இந்த படத்தில் என் மனதைத் தொட்ட மூன்று விஷயங்கள், எமி, ஆர்யா மற்றும் மெதராஸப்பட்டினம் சென்ரல் ஸ்டேசன்.

எமி & ஆர்யா நடிப்பு வெகு இயல்பாக இருந்தது. சென்ரல் ஸ்டேசன் இப்படி இருந்ததா என்று ஆச்சர்ய படும் அளவுக்கு அது ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுக்க வந்தது. சென்னையும், கூவமும் எந்த அளவுக்கு பாழ்பட்டு போயிருக்கிறது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்து விடுகிறது.

படத்தில் இருக்கும் காட்சிகள் லகான், டைட்டானிக் படங்களை ஞாபகப்படுத்தினாலும், படம் அலுக்காமல் செல்கிறது. G.V இசையில் பூக்கள் பூக்கும் தருணம் பாடல் படம் முடிந்த பிறகும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. நிச்சயம் பார்க்க வேண்டிய படம் புதிதான பழைய சென்னைக்காக...

Sunday, August 1, 2010

Aasai – Short film

This is a good short movie. In the era of cell phone there are some persons are living like this among us. Check it out.

Hats off to the director.

Thursday, July 29, 2010

என் பார்வையில்...

அலுவலக பணி காரணமா கொஞ்ச நாளா இந்த பக்கம் வர முடியல (அட உண்மைதாங்கப்பா). நடுவுல கிடைச்ச ஓய்வு நேரத்துல ஆண்டவன் அருளால(என்ன பண்றது நெலம அப்படி) சில நல்ல படங்கள பார்த்தேன். அத பத்தித்தான் இந்த பதிவு.

களவானி

Kalavani

பசங்க விமல் நடிச்சதால படத்த பாக்கணும்னு முன்னாலேயே முடிவு பண்ணியாச்சு. இந்த படதுலயும் நம்ம மீனாட்சி அசத்திட்டாரு. நடிப்பு ரொம்ப இயல்பா இருந்துச்சு. புதுப்பொண்ணு ஓவியா ரொம்ப அழகு. அந்த வில்லன் யாருன்னு தெரியல, ஆனா சூப்பர். ஆவணி முடிஞ்சா என் பையன் டாப்பா வருவான்னு சொல்றத அம்மாவா வந்த சரண்யா டாப்பா பண்ணிருந்தாங்க. மொத்ததுல வெட்டு, குத்து, ரத்தம் இல்லாம ஒரு கிராமத்துக் கதை. இரண்டறை மணி நேரம் நம்மல உக்கார வச்சிடுராங்க.

Inception

inception

பயபுள்ளைக எப்படித்தான் இப்படி யோசிக்கிறாங்கன்னு தெரியல. கனவுல புகுந்து நம்ம கிட்ட இருக்குற எண்ணங்களை மாத்துறத பத்திதான் கதையாம். நமக்கு தெரிஞ்ச ஒரே மூஞ்சியே டைட்டானிக் லியானர்டோதான். படம் ரொம்ப நல்லா இருந்துச்சு. கிராபிக்ஸ்- சொல்ல தேவையேயில்லை, அசத்திட்டாங்க. அதுவும் அந்த நகரமெல்லாம் மடங்குறாப்புல ஒரு சீன்ல அவ்வளவு பெர்பெக்ஸன். கனவுகளையும், அதுல ஏற்படும் லாஜிக்குகளையும் விவரிக்கும் போது சூப்பர். படத்த கண்டிப்பா தீயேட்டர்லதான் பாக்கணும்.

The Karate Kid

df-27222_rtop

இந்த படத்தை நேத்துதான் பார்த்தேன். Attitude-ங்குறது எந்த அளவுக்க்கு முக்கியம்னு ஒரு சில சீன்களில் அழகாக விவரிச்சிருக்காங்க. ஜேடன் சிமித், அவன் சொந்த நாட்டுக்கு போகனும்னு அழும் போது ரொம்ப இயல்பு, ஜாக்கி சானிடம் martial arts கற்றுக்கும் போது அதிரடி. ஜாக்கிசானுக்கு ஒரே ஒரு சண்டை சீன் தான், ஏன்னா இதுல ஜேடன் தான் ஹீரோ. நிச்சயமா இந்த படத்தைப் பார்க்கலாம்.

Wednesday, July 14, 2010

ஞாயிற்றுக்கிழமை... மகதீரா....

கடந்த ஞாயிறு அன்று என்ன செய்வது என்று தெரியாமல், நண்பர்களிடம் இருந்து வாங்கி வந்த CD-களில் இருந்த மகதீரா என்ற தெலுங்கு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். அதுல எந்த தமிழ் படமும் இல்லை, ஆங்கிலத்தில் பார்த்த படமே இருந்ததால் கேபிளார் நல்ல review comments கொடுத்த இந்த படத்தை பார்த்தேன்.

Magadheera_poster

தெலுங்குனாலே மசாலா படம்தான் எடுப்பாங்கன்னு நெனச்சிருந்தேன். இந்த படமும் மசாலா படம்தான். ஆனால் மனமிக்க மசாலா. அதுலயும் graphics-ல மெரட்டிருந்தாங்க. ஒரிஜினல் சிடிங்கறதால சவுண்டும், படமும் மிகவும் நன்றாக இருந்தது. இந்த படத்தை தியேட்டர்ல பாக்கம தவற விட்டோமேன்னு நெனச்சு வருத்தப்பட்டேன்.

படத்துல முக்கியமா இரண்டாவது பாதியில வர அந்த நானூறு ஆண்டுகளுக்கு முந்திய கதை பகுதி மிக நேர்த்தியா கிராபிக்ஸ் பண்ணிருக்காங்க. காஜல் அகர்வாலை அவ்வளவு அழகாக காட்டி இருந்தாங்க. கிராபிக்ஸில் நிறைய மெனக்கெட்டிருந்தாங்க.

ஹீரோ, நூறு பேருடன் சண்டை செய்யும் போர்சன் மிக அருமை. இந்த படத்தை ஏன் தமிழை டப் பண்ணாம விட்டாங்கன்னு தெரியல. அல்லது தமிழ் உரிமையை யாராவது வாங்கிருக்காலாம். இதை தமிழில் ரீமேக்குகிறேன் என்று கெடுக்காமல் இருந்தால் சரி.

Wednesday, June 23, 2010

வெண்ணிலா கபடிக்குழு…

Vennila-Kabadi-kuzhu-006

வெண்ணிலா கபடிக்குழு படத்தில் இடம் பெற்ற இந்த பாடலும் பாடலின் வரிகளும் கேட்பதற்கு இனிமையாகவும்.. மனதை லேசாக்கவும் செய்கிறது... இதோ அந்த பாடல் வரிகள்...கேட்டுப்பாருங்கள் கண்டிப்பாக பிடிக்கும்…

உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பூக்காலம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூட்டுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டுதே…


உயிரில் ஏதோ வலிகள் தோன்றும்
என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்…

பார்த்துப் பழகிய பொழுதுகள் மனதில் விரியுதே
அதை இன்று எதிரினில் நின்றுதான்
நகர்ந்திட மறுக்குதே
மஞ்சளின் கரைகளாக
என் நெஞ்சிலே கலந்துப்போனால்
வானவில் நிறங்களாக
கண் பார்க்கும் முன் மறைந்துப்போனால்…


காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே
காலம் பிரித்தாலும் எந்தன் காதல் பிரியாதே
மேகம் கலைந்தாலும் மீண்டும் தோன்றும் அழியாதே

உயிரில் ஏதோ......என் விழிகள் ஓடி அவள் முகமே தேடும்
பூக்காலம் அருகில் பார்த்தேன்
கார்காலம் பிரிவில் பார்த்தேன்
ஏராளம் நினைவுகள் தீ மூட்டுதே
என்னுள்ளே கனவுகள் போர் மூட்டுதே

Saturday, June 20, 2009

கதை நாயகர்கள்

ஓரு கதை, நாவல் படிக்கும் பொழுது நிச்சயமாக எல்லோரும் அதில் வரும் கதாபாத்திரங்களை எந்த நடிகர்களோடவாது ஒப்பிட்டு அந்த கதையை படிப்பதுண்டு. பொன்னியின் செல்வன் படிக்கும் பொழுது அதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களை நமது நடிகர்களோடு ஒப்பிட்டு பார்த்ததில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

வல்லவராயன் வந்தியதேவன் - கமல்

அருள்மொழிவர்மர் - சிவகுமார்

குந்தவை - லட்சுமி (ராஜராஜ சோழன் படத்தால்)

வானதி - தேவிகா

பெரிய பழுவேட்டயர் - ரங்காராவ்

நந்தினி - ?

இங்கே என்னால் பழைய நடிகர்களையே குறிப்பிட முடிந்தது. அதற்க்காக இப்போதுள்ள நடிகர்களில் திறமையானவர்கள் இல்லாமல் இல்லை. இப்பொழுது வரலாறுகளை மைய்யமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை என்பதே.

Sunday, May 17, 2009

சர்வம் - திரைப்பட அனுபவம்

401px-Sarvam_film

முதல் பாதி,

காக்க காக்க படத்திற்குப் பிறகு காதலை இத்தனை அழகாக காட்ட முடியுமா என்று வியந்த படம். காதலில் எந்த வித விரசமும் இல்லாமல், அழகான, பார்ப்பவர் மனதை லேசாக்குகிறது. ஆர்யாவுக்கும் திரிஷாவுக்கும் காதல் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒத்துப் போகிறது.

இரண்டாம் பாதி

முதல் பாதியின் மூலம் ஏற்பட்ட எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை. மூணாறை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் படம் நன்றாகவே இருந்தது. நம்பி பார்க்கலாம்.

டிஸ்கி: குத்துப்பாட்டையும், பறக்கும் சண்டை காட்சிகளையும் விரும்பும் ரசிகர்களுக்கு சற்றும் ஒத்து வராத படம்.

Friday, April 17, 2009

ஆனந்த தாண்டவம்

anandha_thandavam_tamana_30408_11

பொருளாதார மந்த நிலை காரணமாக சில அநாவசிய செலவுகளை தவிர்த்துக் கொண்டிருக்கும் இவ்வேளையிலும் நல்ல படங்களையும், எதிர் பார்ப்புகள் அதிகம் நிறைந்த படங்களையும் நான் சென்னை சத்யம் திரை அரங்கில் சென்று பார்ப்பதுண்டு. நல்ல படங்களை நல்ல சூழலில் நல்ல quality-ல் பார்க்க வேண்டும் என்ற காரணமேயாகும்.

சுஜாதா அவர்களின் கதை என்ற ஒரு காரணத்துக்காக சமீபத்தில் வெளியான ஆனந்த தாண்டவம் படத்தை பார்க்க சென்னை சத்யம் திரை அரங்கிற்க்கு சென்றேன்.

நான் மட்டும் அல்ல, அங்கு வந்திருந்த அனைவரும் அதே காரணத்திற்க்காக வந்திருந்தார்கள் என்பது புலப்பட்டது.

சரி படம் பத்தி சொல்லனும்னா, ஒரு நாவலை ஒரு பக்கம் விட்டு ஒரு பக்கம் படித்தது போன்ற உணர்வு. படம் நம்மை எங்கே கொண்டு செல்கிறது என்று கடைசி வரை புரியவில்லை.

ஹீரோவிற்கு எப்போது நடிப்பு வரும் என்று எதிர் பார்த்து ஏமாந்ததுதான் மிச்சம்.

படம் பார்த்து விட்டு திரும்பி வரும் போது என் மனசாட்சி சொன்னது “உன் வாழ்க்கையிலே நூறு ரூபாயும், மூன்று மணி நேரமும் இப்படி வேஸ்ட் பண்ணிடியேடா, பாவி !!!”

Thursday, February 19, 2009

நான் கடவுள்

Naan-kadavul-1

சென்ற வாரம் நான் கடவுள் சென்று பார்க்க நேர்ந்தது.

படம் பார்த்து விட்டு வெளியில் வரும் பொழுது என் மனதில் மேலோங்கி இருந்தது இது ஒன்றுதான்.

   அந்த ஆண்டவன் கூட தவறு செய்கின்றான்,

   உடல் ஊனமுற்ற குழந்தைகளை படைப்பதன் மூலம்....

படம் நன்றாக உள்ளது. நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.