சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் நான் முதலில் படிக்க எடுத்தது இந்த புத்தகத்தைத் தான். இந்த புத்தகம் ஜப்பான் நாட்டின் ராக்கேட் வேக வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கின்ற 5S வழிமுறையின் தொகுப்பு என்று சொல்லியவுடன் இந்த புத்தகத்தை வாங்கி விட்டேன். படிக்க மிக ஆர்வமாய் இருந்தது. இந்த வழிமுறையை இப்போது உலகெங்கும் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர் என்பதும், இந்த வழிமுறையை நாம் நம் வீட்டிலும் பயன்படுத்தலாம் என்ற செய்தியும் என் ஆர்வத்தை மேலும் அதிகரித்து.
ஜப்பான் நாட்டினரிடம் மட்டும் அப்படி என்னதான் இருக்கிறது. அவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றலை வெளிப்படுத்த முடிகிறது. அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தானே என்று நாம் நினைப்பதுண்டு. அவர்கள் தங்கள் ஆற்றலை மிகவும் அவசியமானவற்றில் மட்டுமே செலவிடுகின்றனர். சில வேலைகளை தினப்படி செய்வதின் மூலம் அவர்களுடைய ஆற்றல் தேவையில்லாதவற்றில் செலவிட நேர்ந்தால் உடனே அதை திட்டமிட்டு சரி செய்கின்றனர். அந்த தேவையில்லாத வேலைகள் திரும்ப நேராதபடி பார்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் தேவையானவற்றில் மட்டும் அவர்களுடய கவனம் செல்கின்றது.
இந்த புத்தகத்தில் அப்படிப்பட்ட வழிமுறைகளை தெளிவாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதி இருக்கிறார் திரு. சிபி கே சாலமன்.
கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடான இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக்கவும்...
No comments:
Post a Comment