Friday, May 4, 2012

கலக்கி (04/05/2012)

ஹாலிவுட்:

சென்ற வாரம் பார்த்த படம் “The Incredible Hulk” மற்றும் “Bolt”. அவெஞ்சர்ஸ்(Avengers) படம் பார்க்க நினைத்ததால், அதன் முன்னோடிகளான தோர்(Thor), கேப்டன் அமெரிக்கா (Captain America), அயர்ன் மேன் (Iron Man 1 & 2) படத்தை ஏற்கனவே பார்த்து விட்டதாலும் ஹல்கை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

”The Incredible Hulk” எதிர்பார்த்த அள்வுக்கு நன்றாக இல்லை (பகலில் ஹல்க் சண்டை போடும் காட்சியைத்தவிர). இதற்கு முன் வெளியான ஹல்க் படத்தில் பலவகை கேமிரா கோனங்கள் ரசிக்க வைத்தன. இதில் அந்த நேர்த்தி மற்றும் வேகம் மிஸ்ஸிங்.

“Bolt” ஒரு அனிமேஷன் படம். குங்பூ பாண்டா ஏற்படுத்திய தாக்கம் அனிமேஷன் படங்கள் எனக்கு மிகப்பிடித்த ஒரு Genre-ஆக மாறிப்போனது. அனிமேஷன் படங்கள் பிடிக்கக் காரணமே அதில் இருக்கும் நையாண்டியான வசனங்கள்தான். போல்ட் ஒரு காமெடி படமானாலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒருமுறை பார்க்கலாம்

இணையவேகம்:

நான் எனது கைபேசியில் மாதம் ரூ.100 செலுத்தி 2ஜிபி பெறும் இணைய வசதி வைத்துள்ளேன். நகரத்தில் இருப்பதாலும் அதிகம் எழுத்து சார்ந்த அப்ளிகேஷன்களை உபயோகிப்பதாலும் EDGE கனெக்‌ஷனின் வேகம்(~100Kbps) போதுமானதாக இருந்தது. .

ஆனால் நகரை விட்டு வெளியே செல்ல நேர்கையில் இணைய வேகம் Kmphr-லிருந்து Cmphr-ஆக மாறத்தொடங்கி விடுகிறது. அலைபேசியில் EDGE என்று காண்பித்தாலும் வேகம் எடுக்க என்னவோ மிகவும் தள்ளாடுகிறது இணையம். இம்முறை மிகவும் எரிச்சலாகி கஸ்டமர் கேருக்கும் அலைத்தேன். அவர்களின் ஒரே பதில் EDGE-ன் இணைய வேகம் 10kbps-கிழ்தான் இருக்குமாம். அப்போ GPRS-ன் வேகம் என்ன என்று கேட்டதற்கு அவரிடம் பதிலே இல்லை. பின் அவர் எனக்கு 3ஜி இணையத்தைப் பரிந்துரைத்தார். நான் இருக்கும் நகரில் 3ஜி டவர் இருக்கிறதா என்று அவரிடம் விசாரித்தேன். இல்லை என்றார். பின் எப்படி எனக்கு பரிந்துரைக்கிறீர்கள் என்று கேட்டதறகு மெளனமே பதிலானது.

இணையவேகம் பற்றி இணையத்தில்(அலுவலகத்தில்) தேடியபோது கிடைத்த தகவல்.

இந்தியாவை பொருத்தவரை இருக்கவேண்டிய இணையவேகம்

EDGE – average 135Kbps

GPRS – average 35Kbps

இணையம் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்ட இக்காலத்தில், (இந்தியாவில் மட்டும்) இணைய வசதியை ஏற்படுத்துவதில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறோம்.

புத்தகம்:

சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்கள் ஊரில் இருந்தன. இந்த முறை ஊருக்கு சென்ற பொழுது மின் தடையின் பலனாக (பகலில் மட்டும்) புத்தகம் படிக்க முடிந்தது. அப்படி படித்தது தான் கிழக்குப் பதிப்பகத்தாரின் திரு. ஆர். முத்துக்குமார் எழுதிய ”மகா அலெக்ஸாண்டர்

978-81-8368-637-2_b-500x500

அலெக்சாண்டரின் வரலாறு எளிய நடையில், சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில நேரங்களில் தடம் மாறினாலும் அலெக்சாண்டரைப் பற்றி எல்லா விஷயங்களும் சொல்கிறார். 160 பக்கங்களில் அலெக்சாண்டரின் வாழ்க்கை, வீரம், போர்முறை, அரிஸ்டாடில், மாசிடோனியா, பிலிப் எல்லாரையும் பற்றியும் சொல்வதென்றால் கடினம்தான். இந்த புத்தகத்தைப் படிக்கும்பொழுது கிரேக்க நாகரீகத்திற்கு கிளாடியேட்டர்/300 படமும், அலெக்சாண்டராக ரசல்குரோவும் மனதில் தோன்றியவண்ணம் இருந்தார்கள்

3 comments:

  1. Real fact about mobile Internet... Gr8 to see frequent update in your blog

    ReplyDelete
    Replies
    1. நன்றி வைகையின் சாரல்., நிச்சயம் இதை தொடர முயற்சிக்கிறேன்.

      Delete