Wednesday, July 9, 2008

2. நான் மாட கூடல் எனும் மதுரை

இந்தியாவில் உள்ள மிக பெரிய கோவில்களுள் ஒன்று மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில். இது குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது. ஆனால் அது இயற்கை சீற்றங்களால் சற்று அழிவுபெற்றது.

இப்போதுள்ள கோவில் விஸ்வநாத நாயகரால் வடிவம் பெற்று திருமலை நாயகரால் கட்ட பெற்றது. இந்த கோவிலை நான் மாடக்கூடல் என்று சொல்வர். நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் இருப்பதால் இத்தளம் இப்பெயர் பெற்றது. நான்கு திசைகளிலும் கோபுரங்களை முதன்மையாக கொண்டு ஆடி, சித்திரை, மாசி மற்றும் வெளி வீதி என்று மதுரை அந்த காலத்திலே மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்டதாகும்.


மதுரை கோவிலில் சுமார் 3.3 கோடி சிற்பங்கள் உண்டு என்று கணகிடபட்டுள்ளது. இப்பொழுதுள்ள கோவில் திராவிட கலாச்சாரத்தை அடிபடையாக கொண்டு கட்டப்பட்டதாகும். இக்கோவிலில் இப்பொழுது 12 உள் கோபுரங்கள் மற்றும் 4
உயரமான கோபுரங்கள் உள்ளன. அதனுள் தெற்கு திசையில் உள்ள கோபுரம் மிகவும் உயரமானது. இது 49 மீட்டர் உயரம் உடையது.

இக்கோவிலுள்ள அஷ்ட ஷக்தி மண்டபத்தில் திருவிளையாடல் புராணமும், மீனாக்ஷி அம்மன் மதுரை இளவரசியாக இருந்த புராணமும் சிற்பங்களாக வடிக்க பட்டுள்ளன. பொற்றாமரை குளம் மீனாக்ஷி அம்மனின் இடது புறம் அமைந்துள்ளது. இந்த குளத்தில்தான் நம் முன்னோர்கள் தமிழ் செய்யுள்களை மதிப்பீடு செய்தனர்.

செய்யுள்கள் எழுதி முடித்த பின்னர் அவை இக்குளத்தில் போடப்படும். மூழ்கியபின் மேலே மிதக்கும் சுவடுகளை தமிழில் சிறந்தது என்று கருதுவர். உலக பொதுமறையாம் திருக்குறள் இவ்வாறு மதிப்பீடு செய்தது என்று ஒரு வரலாறும் இங்கு நிலவுகிறது.

கோவிலின் மேற்கில் ஊஞ்சல் மண்டபமும், கிளி கூட்டு மண்டபமும் அமைந்துள்ளன. கிளி கூட்டு மண்டப்பத்தில் கிளிகள் மீனாக்ஷி தாயின் பெயரை உட்சரித்து கொண்டிருக்கும். வெள்ளிதோறும் ஊஞ்சல் மண்டபத்தில் மீனாக்ஷி தேவியின் உற்சவ சிலையை வைத்து பூஜ்ஜிப்பர்.

இந்திரன் சொக்கநாதரை பூஜித்த கடம்ப மரத்தின் கன்று இக்கோவிலில் இப்பொழுது காணலாம். கோவிலின் வெளி புறத்தில் கம்பத்தடி மண்டபமும் வெள்ளி அம்பலமும் அமைந்துள்ளன. மீனாக்ஷி சுந்தரேஷ்வரரின் திருமண காட்சியை இந்த மண்டபத்தில் சிற்பமாக வடித்துள்ளனர். சிவபெருமான் நாட்டியமாடும் ஐந்து மண்டபங்களில் இந்த வெள்ளி அம்பலமும் ஒன்று. (மற்ற நான்கு மண்டபங்கள்: சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி மற்றும் குற்றாலம்).

இங்கு உள்ள நடராஜர் சிலை மேலும் சிறப்பு பெற்றது. இங்குள்ள நடராஜர் சிலை
வலது காலை தூக்கி ஆடும் விதமாக அமைய பெற்றுள்ளதே இதன் சிறப்பு அம்சமாகும். மன்னன் ராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க நடராஜர் இப்படி ஆடியதாக கூறப்படுகிறது. நடராஜர் சிலை வெள்ளியால் செய்ய பெற்றுள்ளதால் இதற்கு வெள்ளி அம்பலம் என்று பெயர் வந்தது.


இங்கு அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபம் மேலும் சிறப்பு பெற்றதாகும். இது 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தின் வெளியில் இசை எழுப்பும் தூண்கள் அமயபெற்றுள்ளன. இதை தட்டும் பொழுது வெவ்வேறு விதமான இசைகளை எழுப்பும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு அமைத்துள்ள முக்குறுணி விநாயகர் சிலை, கோவிலுக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில், திருமலை நாயகர் கோவிலுக்காக குளம் வெட்டுகையில் தோண்டி எடுக்க பட்டது. இன்றும் இக்குளம் தெப்பகுளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இக்குளத்திற்கு என்று தனியாக விழாவும் நடக்கிறது. நான் மாட கூடலில் நாம் வியக்கும் வகையில் மேலும் சிறப்புகள் ஏராளமாக உள்ளன. அதை தொகுத்து அடுத்த பதிவில் வழங்குகிறேன்.

நன்றி

தொடரும்...

1 comment: