நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் தமிழ் புத்தகம் - அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்.
அவர் எழுதிய பார்த்திபன் கனவு புத்தகத்தை படித்து முடித்த பின் அவர் எழுத்துக்களின் மீது கொண்ட ஆர்வத்தினால் இப்போது இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்.
இந்த புத்தகம் 5 பாகங்களை கொண்ட ஒரு பெரிய படைப்பாகும்.
பார்த்திபன் கனவு படிப்பதற்கு முன் இந்த புத்தகத்தை வாங்கி விட்டபடியால், முதலில் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். முதல் பாகம் படிக்கும் பொழுது இதன் மீது அவ்வளவாக ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. சிரிய புத்தகங்களேயே படித்து பழக்கப்பட்ட எனக்கு இப்பெரும் படைப்பை படிக்க சற்று சோம்பேரித்தனமாகத்தான் இருந்தது. அதனால் நான் படிக்க ஆரம்பித்த முதல் நான்கு நாட்களிலே என் ஆர்வம் குறைந்து படிப்பதை பாதியிலேயே விட்டு விட்டேன்.
பார்த்திபன் கனவு புத்தகம் சிரியதாக இருந்ததால், அதை என்னால் சுலபமாக படிக்க முடிந்தது. கல்கி அவர்களின் எழுத்துக்களை படிக்கும் பொழுது என்னை அறியாமலேயே வரலாறுகளின் மீது எனக்கு மிக்க ஆர்வம் ஏற்பட தொடங்கியது.
இப்போது அந்த ஆர்வத்தின் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் வரலாற்றுப்புதினத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். (இந்த பதிப்பை எழுதும் போது நான் நான்காம் பாகத்தின் இறுதியில் இருக்கிறேன்). கதைக் கள அமைப்பும் அவர் விவரிக்கும் பாங்கும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. நண்பர்களுக்கு நேரமிருந்தால் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கவும்.