சமீபத்தில் தினமலர் நாளிதழில் தமிழ்நாட்டின் விரைவு போக்குவரத்துகழக பேருந்துகளின் மோசமான நிலையினைப்பற்றி ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அது 100% முற்றிலும் உண்மை. பேருந்துகளை வாங்கி விட்டால் மட்டும் போதாது, அதை நன்கு பராமரிக்கவும் வேண்டும். அதில் முற்றிலும் செய்வதில்லை விரைவு போக்குவரத்து ஊழியர்கள். சிலர் நாம் கொடுக்கும் குறைந்த கட்டணத்தால்தான் பேருந்தை சரியாக பராமரிப்பதில்லை என்று சொல்ல நேரிடும். ஆனால் அது முற்றிலும் தவறான சப்பைக்கட்டு என்பது கர்நாடகா மாநில அரசு போக்குவரத்தான KSRTC-யை உபயோகப்படுத்தினால் கண்கூடாகத் தெரிய வரும்.
கடந்த நான்கு மாதங்களில் சொந்த ஊருக்குச் செல்ல இந்த பேருந்தைத்தான் உபயோகப்படுத்துகிறேன். பெங்களூரில் இருந்து மதுரைக்கு செல்ல ரூபாய் 310 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் நம் தமிழ்நாட்டின் விரைவு பேருந்தை விட சற்று அதிகம் தான். ஆனால் இதில் அவர்கள் அளிக்கும் வசதிகளில் சில,
* மிக முக்கியமானதாக எல்லோரும் நினைக்கும் நேரம் தவறாமை.
* வயிற்றைப் பதம் பார்க்காத, அதிகப்படியான விலையில்லாத நல்ல உணவகங்களில் நிறுத்துவது.
* அமர்ந்து செல்லும் இருக்கைகள் நல்ல விதமாய் பராமரிப்பது.
* பேருந்து உள்ளே நன்றாக பராமரித்து வைப்பது (தனியார் பேருந்துகளுக்கு சற்றும் சளைக்காத வகையில்).
* கணினி வழியில் டிக்கெட் எடுக்கும் வசதி (www.ksrtc.in)
* பெங்களூர்-ல் உள்ள அனைத்து ஏரியாவிலும் ஏஜெண்டுகள் மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி
* எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது, பயணம் செய்யும் எல்லாருக்கும் விபத்துக் காப்பீடு வைத்திருப்பது. இது கட்டணத்தில் அடங்கும்.
இங்கே குறிப்பிட்டவற்றில் ஒன்று கூட தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்தின் நடைமுறையில் இருந்ததாக எனக்கு தெரியவில்லை.
நான்கு மாத அனுபவத்தில் என்னால் ஒரு முடிவுக்கு வர முடியாமல் கடந்த மூன்று வருடங்களாக இந்த பேருந்தை உபயோகப்படுத்தும் நண்பரிடமும் விசாரித்து இந்த கட்டுரையை எழுதியுள்ளேன்.
டிஸ்கி:
இதன் மூலம், நான் தமிழ் நாட்டின் எதிர்பாளன் என்று யாரும் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பில்லப்பா !!! கொடுக்கும் காசுக்கு தரமான பொருள் கிடைக்க வேண்டும் என்று நினைக்கு ஒரு சாதாரண இந்தியன்.