இங்கே நான் சொல்ல இருப்பது, எனது நண்பனுக்கு ரயிலில் பயணிக்கும் பொழுது ஏற்பட்ட காமெடி கலந்த கசப்பான அனுபவம்.
அந்த அனுபவத்தை கூறும் முன் இந்திய ரயில்வேயில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விதியை இங்கு நான் சுட்டிக்காட்ட விளைகிறேன்.
இங்கு கீழே கொடுத்திருப்பது முன்பு இருந்த விதி.
இந்த விதிப்படி டிக்கெட் எடுத்தவர், பரிசோதகரிடம் தன்னிடம் உள்ள அடையாள அட்டையை (டிக்கெட் பதிவு செய்யும் பொழுது குறிப்பிட்டது) காண்பித்து இரயிலில் அனுமதி பெற வேண்டும்.
இப்போது இந்த விதி சற்று தளர்த்தப்பட்டு உள்ளது. இப்பொழுதுள்ள விதிப்படி டிக்கெட் பதிவு செய்யும் பொழுது நாம் எந்த வித அடையாள அட்டையையும் குறிப்பிட தேவையுமில்லை. மேலும், இரயிலில் டிக்கெட் பரிசோதகரிடம் அப்போது நம்மிடம் உள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டையை (அசல்) காண்பித்தால் போதுமானது.
இப்போது என் நண்பனுக்கும், இந்திய இரயில்வேயின் பரிசோதகருக்கும் நடந்த சுவையான அனுபவம்.
நண்பன்: (டிக்கெட்டை மற்றும் பான் அட்டையை பரிசோதகரிடம் கொடுக்க...)
பரிசோதகர்: என்ன டிக்கெட்ல எந்த அடையாள அட்டை எண்ணையும் அச்சிடப்படவில்லை. எங்கே இதை எடுத்தீங்க ? (பக்கத்தில் இருப்பவரிடமிருந்து இருந்து ஒரு E-Ticket யை வாங்கி) இத பாருங்க இந்த டிக்கெட்ல எல்லாம் இருக்கு.
நண்பன்: (பக்கத்தில் இருப்பவரிடம்) சார் இதை எப்போ ப்ரிண்ட் எடுத்திங்கன்னு தெரிஞ்சிக்கலாமா ?
பயணிப்பவர்: மூன்று மாதத்திற்கு முன்பு
நண்பன்: (பரிசோதகரிடம்) சார் நான் நேற்றுதான் இதை ப்ரிண்ட் எடுத்தேன். இந்த விதி ஒரு மாதத்திற்கு முன்பே மாற்றப்பட்டு விட்டது. அதனால் தான் எந்த அடையாள அட்டை எண்ணையும் அச்சிடப்படவில்லை. அதுவும் இல்லாமல் இதிலேயே சொல்லிருக்கே, எந்த அடையாள அட்டையும் காட்டலாம் என்று.
பரிசோதகர்: அதெல்லாம் எங்களுக்கு தெரியாது சார், நீங்கதான் சரியா எடுத்து வந்திருக்கனும். நான் நினைத்தா உங்களை அடுத்த நிறுத்தத்துல இறக்கி விட முடியும். ஒழுங்கா அடுத்த தடவை வரும் பொழுது சரியா எடுத்து வாங்க.
நண்பன்: சரி சார் (விதியை நொந்து கொண்டு). அடுத்த தடவை வரும் பொழுது சரியா கொண்டு வரேன் (எப்படி என்று தெரியாமல்).
------------------------------------------------------------------------------------------------------
இந்த நிகழ்ச்சியை என் நண்பன் சொல்லும் பொழுது என்னுள் எழுந்த சில கேள்விகள்,
1. சாதரண மக்களுக்கு பத்திரிக்கை மூலம் புதிய விதிகளை அறிவிக்கும் இந்திய இரயில்வே, தங்களின் ஊழியர்களுக்கு இதை அறிவிக்காமலா இருக்கும் ?
2. டிக்கெட்டிலேயே விதிகள் பட்டியலிட்டு காட்டியும் TTE சில நேரங்களில் ஒத்துக் கொள்ளாதது ஏன் ?
3. பிரயாணிகளிடம் சில TTEகள் கனிவாக பேசாதது ஏன் ?
4. விதிகளை சொல்லிக் கொடுக்க வேண்டியவரே, விதிகளை தெரிந்து கொள்ளாமல் இருப்பது ஏன் ?