Saturday, April 21, 2012

கலக்கி (22/04/2012)

 

தமிழ் சினிமா:

சிவகார்த்திகேயன் – காமெடியை ரசிக்கும் நண்பர்களுக்கு நிச்சயமாக பரிச்சயமான ஒரு முகம். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமாகி இன்று தமிழ் நாட்டையே தன் டைமிங் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரபலம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இவரும் சந்தானமும் ஒரு சிறந்த உதாரணம்.

siva-karthikeyan-03

இவர்களை வளர்த்து விட்டதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதை மற்ற டிவி ஆன்கர்களின் திரைவளர்ச்சியிலேயே நாம் பார்த்துவிடலாம். டைமிங்காமெடியில் அசத்துவதற்கு இவருக்கு நிகர் இவரே. நான் அடிக்கடி பார்த்து சிரிக்கும் இவரது காமெடி உங்களுக்காக…

 

 

ஹாலிவுட் சினிமா: 

இந்த வாரம் பார்த்த படம் "Sherlock Holmes 2 - A Game of Shadows". இது ஷெர்லாக் ஹோம்ஸின் இரண்டாவது படம். முதல் படத்தை விட இது இன்னும் சிறப்பாக உள்ளது. நிச்சயம் பார்க்க வேண்டிய படம். ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் அந்த கதையில் வரும் கேரக்டர்களின் குணாதிசயங்களை பிரபல பதிவர் திரு.கருந்தேள் வெகு சிறப்பாக விவரித்துள்ளார். அதைப் படிக்க இந்த சுட்டியை அழுத்தவும்

Sherlock Holmes 2: A Game of Shadows (2011) – English

Sherlock Holmes 2:A Game of Shadows (2011) - Part2

இவர் விவரித்துள்ள விஷயத்தை படிக்கும் பொழுது நம் கணேஷ் வசந்த் ஜோடி ஞாபகத்துக்கு வருகிறார்கள். இதுவும் அது போல கிரைம் நாவல் அல்லது சிறு கதைதான். நேரம் இருந்தால் படிக்கணும்.

அடுத்ததாக பார்க்க எண்ணியிருக்கும் படம் “Money Ball”. ஆறு பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். ஒரு பேஸ்பால் குழுவின் மேலாளராக இருக்கும் பில்லிபீன் (பிராட்பிட்), தங்களுக்கு கொடுத்துருக்கும் பட்ஜெட்டில் ஒரு கணிணி உதவியாளருடன் சேர்ந்து எப்படி ஆட்டக்காரர்களை எடுக்கிறார் என்பது பற்றியது.

 

திருவிழா:

சித்திரை தொடங்கிவிட்டாலே மதுரையில் விழாக்காலம் ஆரம்பித்துவிடும். தமிழகத்தின் முக்கியமான திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. அதன் நிகழ்ச்சி நிரலை கீழே இணைத்துள்ளேன்.
மதுரை நகரமாகிவிட்டதாலும், மற்றும் சில பாதுகாப்பு காரணங்களாலும் வைகை ஆற்றில் நான்கு நாட்கள் நடந்து கொண்டிருந்த திருவிழா இப்பொழுது இரண்டு நாளில் முடிந்து விடுகிறது. ஆனால் வைகை ஆற்றங்கரையில் இருக்கும் வேறு சில ஊர்களில் இன்னும் அந்த திருவிழா ஆற்று மணலில் பெளர்ணமி நிலவில் நான்கு நாட்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது.
மதுரை சித்திரை திருவிழா 2012 – நிகழ்ச்சி நிரல்
23-04-12 - திங்கள் - சித்திரை திருவிழா கொடியேற்றம்
26-04-12 - வியாழன் - தங்க பல்லாக்கு
28-04-12 - சனி - ரிஷப வாஹனம்
30-04-12 - திங்கள் - ஸ்ரீ மீனாக்ஷி பட்டாபிஷேகம்
01-05-12 - செவ்வாய் - ஸ்ரீ மீனாக்ஷி திக்விஜயம்
02-05-12 - புதன் - ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
02-05-12 - புதன் - புஷ்பா பல்லாக்கு
03-05-12 - வியாழன் - திரு தேர் தேரோட்டம் கள்ளழகர்
05-05-12 - சனி - தல்லாகுளத்தில் எதிர் சேவை
06-05-12 - ஞாயிறு - ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல்
08-05-12 - செவ்வாய் - கள்ளழகர் புஷ்பா பல்லாக்கு

Tuesday, April 17, 2012

The “new iPad” இப்பொழுது இந்தியாவில்

ipadnewthe
ஆப்பிளால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐபேட் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. வரும் ஏப்ரல் 27 முதல் இது இந்திய மார்க்கெட்டில் கிடைக்கும். இதன் இந்திய விலை Wi-Fi models Rs. 30500 (16GB), Rs. 36500 (32GB), and Rs. 42500 (64GB) மற்றும் Wi-Fi+4G Rs. 38900 (16GB), Rs. 44900 (32GB), and Rs. 50900 (64GB) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் எப்போதுமே அதிக விலைதான்.

சமீபத்தில் இந்தியாவில் 4G தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும் இந்த புதிய ஐபேட் இந்தியாவில் இருக்கும் 4G தொழில்நுட்பத்துடன் ஒத்துப்போகாது(not compatible) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால் ஏற்கனவே இருக்கும் 3ஜி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

Monday, April 16, 2012

iPhone – என் போன்–1 (Tweetbot)

நான் ஐ-போன் வாங்கி ஒரு வருடம் ஆகப்போகின்றது. முதல் ஐ-போன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வாங்க வேண்டும் ஒரு ஆவல் மனதில் எழுந்தாலும் நிறைவேறியதோ ஐ-போன் 4வது பதிப்பில்தான். அதுவும் மிகுந்த யோசனைகளுக்குப்பின்னரே வாங்கினேன். இதுநாள் வரையில் இவ்வளவு விலை கொடுத்து ஒரு போனை வாங்கிவிட்டோமே என்ற நினைப்பு, கவலை, வருத்தம் வரவில்லை. அதற்கு முழுமுதற்காரணம் ஐ-போன்களில் உள்ள அப்ளிகேஷன்கள்.

ip5(1)

ஐ-போனின் ஒவ்வொரு அப்ளிகேஷன்களின் வடிவைப்பும், அதன் பயன்பாடுகளும், தினம் தோன்றும் புதுவகை அப்ளிகேசன்களும், ஒவ்வொரு அப்டேட்டிலும் அவர்கள் கொடுக்கும் புது சிறப்புகளும், நாளுக்கு நாள் ஐ-போன்களை புதிதாக்கிக் கொண்டிருக்கிறதேயொழிய பழைய பயன்பாட்டை மட்டுமே வைத்துக் கொண்டு நம்மை சோர்வுறவைக்கவில்லை.

இது போன்ற விஷயங்கள் ஆன்ராய்டிலும் இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறிய உதாரணம். ஐபோன் உபயோகிப்பது விண்டோசை உபயோகிப்பது போல் மிகவும் எளிது ஆனால் ஆன்ராய்ட் லினக்ஸ் போன்றது கம்பியுட்டர் வல்லுநர்களையே தடுமாறவைப்பது. ஐபோன் உபயோகிப்பதில் விண்டோசைப் போன்றதே தவிர அதனிலுள்ள மென்பொருளானது மிகவும் தேர்ந்தது.

ஆனால் இந்த பதிவு ஐபோன் பெரிதா, ஆன்ராய்ட் பெரிதா என்பது பற்றியல்ல. அதனால், விஷயத்துக்கு வருவோம், நான் முன்பே குறிப்பிட்டது போல், ஐபோனின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதற்காக வடிவமைக்கப்படும் அப்ளிகேஷன்கள். நான் கடந்த ஒரு வருட காலமாக நிறைய அப்ளிகேஷன்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதை தங்களுடன் பகிரவே இந்த பதிவு.

இந்த முதல் பதிவில் நான் பகிரவிருக்கும் அப்ளிக்கேஷன் டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு. அதன் பெயர் டிவிட்பாட்(Tweetbot - http://tapbots.com/software/tweetbot/)

screenshot_02

இந்த அப்ளிக்கேஷன் டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றது. டிவிட்டரில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் இரண்டு அல்லது மூன்று டச்களின்மூலம் இதில் நாம் செய்யமுடிவது இதன் தனிப்பெரும் தன்மை. இது டிவிட்டர் இலவசமாக கொடுக்கும் நேடிவ் டிவிட்டர் அப்ளிகேசனை விட எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும்., குறைவான இணைய வேகத்திலும் எளிதில் டிவிட்டக் கூடியதாகவும் இருக்கின்றது.

டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் மிகவும் பயன்படுத்தக் கூடியதான லிஸ்ட்(lists) பயன்பாடு இதில் அதன் மேலுள்ள டைம்லைனை கிளிக் செய்வதின் மூலம் நாம் வேறு லிஸ்ட்டின் டைம்லைனில் மாறமுடிகிறது. இதன் விலை 2.99$. சிலருக்கு அதிகமாகத்தோன்றினாலும் இதில் உள்ள பயன்பாட்டுக்கு ஏற்றவிலைதான். சிலநேரங்களில் 0.99$க்கும் கிடைக்கிறது ஆனால் எப்பொழுது என்று சரியாக சொல்ல முடிவதில்லை.

டிஸ்கி:

இங்கு பகிரப்படும் அப்ளிகேஷன்கள் நான் பயன்படுத்திய பின்னர் எனக்கு உபயோகமுள்ளதாகக் கருதுவதால் மட்டுமே பகிரப்படுகிறது. நீங்க வாங்கி உங்களுக்கு பிடித்தலும் பிடிக்காமல் போவதற்க்கும் கம்பேனி பொருப்பல்ல Winking smile

கலக்கி (15/04/2012)

சினிமா:

இந்த வாரம் பார்த்த படம் ”ஒரு கல் ஒரு கண்ணாடி”(OKOK)., சந்தானம் புகுந்து விளையாடுகிறார்., இது அவருடைய படம் என்று சொல்ல எல்லா தகுதியும் உண்டு (சந்தானத்தின் அறிமுக காட்சியில் தியேட்டரில் எழுந்த கைதட்டல்களே இதற்கு சாட்சி). உதயநிதி ஸ்டாலின் ஒரு நல்ல சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாக செய்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு விழாவில் விக்ரமன் சொன்னது சரி என்றே தோன்றுகிறது. இசையமைப்பாளருக்கு கோடிக்கணக்கில் அள்ளித்தருவதை வீண். இதற்கு பதில் பாலச்சந்தர் சார் கேளடி கண்மணி படத்தில் செய்ததைப் போல் செய்து விடலாம் (ராஜா வேறு படத்தில் பிஸியாக இருந்ததால் இளையராஜாவின் இசைக் கோர்வையை பிண்ணனிக்கு தக்கவாறு அவரே பயன்படுத்தி ரிக்கார்டிங் செய்தது). ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அட்டர் வேஸ்ட்.

பில்லா-2 படத்தின் டீஸர் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. “என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிசத்தையும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்குனதுடா!!!”. நிச்சயம் மங்காத்தா அளவு பெரிய ஓப்பனிங் இந்த படத்துக்கும் இருக்கும்.

ஹாலிவுட் சினிமா:

நண்பனின் பரிந்துரையின் பேரில் பார்த்த படம் “Full Metal Jacket”. வியட்நாம் போருக்காக தயார்படுத்தப்படும் வீரர்கள் பற்றிய படம். அவர்கள் மனதில் தங்களது பணி, எதிரியை கொல்வதே என்ற இலக்கை எப்படி விதைக்கிறார்கள் என்று பற்றி சொல்கிறார்கள். வசனங்களின் கெட்டவார்த்தைகளின் நெடி மிக அதிகம். எனக்கு இந்த படத்தில் மிகப்பிடித்த வசனம் (வியட்நாம் போர்களத்தில் ஒரு வீரர் பேசுவது) “I wanted to see exotic Vietnam, the crown jewel of Southeast Asia. I wanted to meet interesting and stimulating people of an ancient culture... and kill them”

புது விஷயம்:

ஜானி படத்தில் வரும் என் வானிலே பாடலை இதுவரை ஜென்சி பாடியதென்று நினைத்திருந்தேன். நேற்று ஃபேஸ்புக்கில் “தெரிந்த சினிமா தெரியாத விஷயம்” பக்கத்தில் அது பாடகி சுஜாதாவின் முதல் பாடல் என்று போட்டிருந்தார்கள். ராஜா சார் இரண்டு பேரையும் பாட வைத்து இரு தடவை ரெக்கார்டிங் பண்ணாரா ? படத்தில் இடம்பெறுவது யாருடைய பாடல், விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். கீழே இருக்கும் வீடியோவில் வரும் குரல் சுஜாதா அவர்களின் குரல் போலுள்ளது.

கிரிக்கெட்:

ஐபிஎல் ஆரவரமாக நடந்து கொண்டிருக்கிறது. முன்பு போல் வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பு இல்லாமல் நிறைய இந்திய புதுமுகங்கள் கலக்கிக் கொண்டிருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம். 20-20 உலகக் கோப்பை வரப்போகும் நிலையில் ராஹானே, ஓ.சா, ஹர்மீட் சிங், அகர்வால் போன்ற இளரத்தங்கள் கலக்கிக் கொண்டிருப்பது அவர்களை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணியாக நிச்சயம் அமையும்.