Tuesday, May 25, 2010

என்று முடியும் இந்த நாடோடி வாழ்க்கை...


படிக்க ஒரு ஊர்...
வேலைக்கு என்று பல ஊர்...

எத்தனை ஊர்கள் கண்டு களித்தாலும்
சொந்த ஊரின் பாதுகாப்பு கிடைக்குமா ...
எத்தனை வித உணவுகள் கிடைத்தாலும்
அம்மா செய்யும் வத்தைக்குழம்புக்கு ஈடாகுமா ...
எத்தனை நண்பர்கள் வாய்த்தாலும்
சிறுவயதில் பூத்த நட்புபோல் வருமா ...
எத்தனை வசதிகள் வந்தாலும்
பெற்றோருடன் இருத்தல் போல் ஆகுமா ...

என்று முடியும் இந்த நாடோடி வாழ்க்கை...