மூன்று விரல் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த 5 நாளில் முடித்து விட்டாலும் இன்று தான் இந்த புத்தகத்தை பற்றி எழுத முடிந்தது.
மென்பொருள் தொழில் சார்ந்தவர்களைப் பற்றி சாதாரண மொழி நடையில் எழுதியிருப்பது படிப்பதற்கு மிகவும் எளிதாக இருந்தது. திரு. சுஜாதா அவர்களைப் போல கதாபாத்திரங்கள் நேரிலும், மனதிலும் பேசும் மறுமொழிகள் அருமை. சுதர்சன் (கதாநாயகன்) அல்லாமல், ராஜேந்திரன், சந்தியா, புஷ்பா, ராவ் போன்ற கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.
கதையின் முடிவு கடைசி ஒரு சில அதியாயங்களில் மாறியது எதிர்பாராதது.
இந்த நாவல், திரு. இரா.முருகன் அவரிகளின் இதர படைப்புகளை தேடவைத்தது. இதன் தொடர்ச்சியாக அரசூர் வம்சம், 40- இரட்டை தெரு என்ற இரண்டு நாவல்களையும் வாங்கி விட்டேன்.
படித்து முடித்ததும் என்னுடைய கருத்துகளை பரிமாரிக் கொள்கிறேன்.
டிஸ்கி:
முன்று விரல் புத்தகத்தைப் பற்றி வலைப்பூ நண்பர்கள் எழுதிய கருத்துக்களை படித்த பின் இந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.
ஆமா, அதென்ன மூன்றுவிரல் அப்படீன்னு கேக்குரவங்களுக்கு,
Ctrl + Alt + Del - இதை இயக்க மூன்று விரல் தேவை படுகிறது. இதற்கு மேலும் விவரம் தெரிய வேண்டுமானால் கதையை படிங்கப்பா !!!