Monday, October 20, 2008

என்று தணியும் இந்த மின்சார தாகம்...

 

                              Electric_transmission_lines.resize

அந்த் செய்தியை கேட்டு மிகவும் மனம் நொந்து போனேன்.

600 யுனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தால் 50% அதிகமாக மின்சார கட்டணம் செலுத்த வேண்டுமாம். 600 யுனிட் என்பது ஒரு வீட்டிற்கு மிகவும் அதிகமான பயன்பாடுதான் ஆனால் அதற்கு 50% அபராதம் என்பது மிக மிக அதிகமான அபராத தொகையாகும்.

இப்படி பட்ட அபராதத்தை விதிக்கும் முன் நமது முதல்வர் சிறிது நேரம் யோசிக்க வேண்டாமா ? அல்லது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்துவதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டாமா ?

அவர் தலைமை தாங்கும் விழாக்களுக்கு செலவாகும் மின்சாரத்தை சேமித்தாலே ஒரு சிறிய தொழிற்சாலைக்கு ஒரு நாளூக்கு தேவையான மின்சாரத்தை எடுத்துவிடலாம்.

சென்னையில் எதனையோ மேம்பாலங்கள் கட்டபடுகின்றன, அதற்கெல்லாம் இரவில் திறப்பு விழா வைப்பதைவிட பகலில் வைக்கலாமே ?

திறப்பு விழாக்கள் வைக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அதே போல் இந்த மாதிரி பொது விழாக்களுக்கு செலவாகும் அதிகபடியான மின்சாரத்திற்கு அபராதம் விதிக்கலாமே.

நமது முதல்வரோ, மின்சார அமைச்சரோ இதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பார்களா ???

Sunday, October 19, 2008

நல்ல கூட்டணி.. (NHM Writer + Windows Writer)

 

                            WLiveWriter

வலைப்பூ நண்பர்களுக்கு...

வலைப்பதிவு எழுதுவதை உற்சாக படுத்தும் விதமாக Microsoft ஒரு சிறந்த தொகுப்பை தன் Windows Live-ல் அறிமுக படுத்தியுள்ளது. அது தான் Windows Writer.

இதை பதிவிறக்கம் செய்ய - Windows Live Package

Windows Writer-ல் உங்கள் ப்ளாக்-ல் உள்ளது போல் அனைத்து வசதிகளும் இருக்கிறது. இதன் மூலம் நிங்கள் நேரடியாக உங்கள் பதிப்பை இணையத்தில் போட முடியும்.

அப்போ இந்த NHM Writer எதுக்கு ?

Windows Writer தொகுப்பை ஆங்கிலம் எழுத மட்டுமே பயன்படுத்த முடியும். NHM Writer தொகுப்பானது Microsoft Office-ல் தமிழில் எழுத பயன் படுத்தபடும் ஒரு மென்பொருளாகும். இதில் 5 வகையான தமிழ் எழுத்துருக்களை பயன் படுத்தமுடியும்.

இந்த மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவும் பொழுது, உங்களால் Windows Writer-ல் தமிழில் எழுத முடியும்.

NHM Writer பதிவிறக்கம் செய்ய - NHM Writer

Monday, October 6, 2008

எதாச்சும் செய்யணும் சார்..



சமிபத்தில் சன் டிவி யில் சிவப்பதிகாரம் படம் பார்க்க நேர்ந்தது. அந்த படத்தின் முடிவாக ஒரு கேள்வி ரசிகர்களாகிய நம்மிடம் கேட்க படும். அது தேர்தலில் நிற்க என்ன தகுதி வேண்டும் என்பதுதான்.

தற்போது தேர்தலில் நிற்க வயது மட்டுமே ஒரு தகுதியாக கருத படுகிறது என்று அந்த படத்தில் வரும் கதாநாயகன் சொல்வார். தேர்தலில் நிற்க வயது சரியாக இருந்தால் மட்டும் போதுமா ??? (அவரின் மீது எந்த விதமான கிரிமினல் கேஸ்கள் இருக்க கூடாது என்றும் ஒரு சட்டம் இருக்கிறது.)

இந்த தகுதிகள் மட்டும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு போதுமா எனபதே என் கேள்வி ? அந்த படத்தில் சொல்வது போல் சில சட்டங்களை ஏன் கொண்டு வரமுடியாது ???

அந்த படத்தில் சொல்லப்படும், நடை முறை சிக்கல் இல்லாத சில வழிகள் என நான் கருதுபவை

  • ஒவ்வொரு தேர்தல் வாக்கு சீட்டிலும் அசோக சக்கரத்தை ஒரு பொது சின்னமாக வைக்க வேண்டும். அந்த சின்னத்திற்கு அதிக வாக்குகள் விழுந்தால், அந்த மாவட்டத்தின் கலெக்டர் அவர்களே மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்க பட வேண்டும்.
  • MLA ஆகா வேண்டும் என்றால், இரண்டு முறை நகராச்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும், இரண்டு முறை MLA ஆக இருந்தால் மந்திரி ஆகலாம். இரண்டு முறை மந்திரி ஆக இருந்தால் மட்டுமே முதல் மந்திரி ஆக தகுதி பெறுவார்
  • ஒருவர் இரண்டு முறைக்கு மேல் முதல் மந்திரி ஆக முடியாது
  • தேர்தலில் நிற்க TNPSC தேர்வில் நல்ல மதிப்பேன் எடுக்க வேண்டும்
  • ஒட்டு போடுவதை கட்டாயமாக்குதல்

இப்படி போன்ற நல்ல சட்டங்களை நம்மால் வெகு சுலபமாக கொண்டு வர முடியும். ஆனால் நமது அரியணையில் இருப்பவர்கள் தம்மை பாதிப்பது போன்ற எந்த ஒரு சட்டத்தையும் இயற்ற மாட்டார்கள்.

இது போன்ற சட்டங்களை கொண்டு வர நாம எதாச்சும் செய்யனும் சார்...

பி.கு

நடைமுறை படுத்தக்கூடிய நல்ல தேர்தல் விதிமுறைகளை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்

இது போன்ற சட்டங்கள் நடைமுறை படுத்தபட்டால், வடிவேல் போன்றவர்கள் தங்கள் தனிமனிதவிருப்பு வெறுப்புகளுக்கு எல்லாம் தேர்தலில் நின்று ஜெய்பேன் என்று சபதம் விட முடியாதல்லவா ???