Showing posts with label கலக்கி. Show all posts
Showing posts with label கலக்கி. Show all posts

Friday, May 4, 2012

கலக்கி (04/05/2012)

ஹாலிவுட்:

சென்ற வாரம் பார்த்த படம் “The Incredible Hulk” மற்றும் “Bolt”. அவெஞ்சர்ஸ்(Avengers) படம் பார்க்க நினைத்ததால், அதன் முன்னோடிகளான தோர்(Thor), கேப்டன் அமெரிக்கா (Captain America), அயர்ன் மேன் (Iron Man 1 & 2) படத்தை ஏற்கனவே பார்த்து விட்டதாலும் ஹல்கை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.

”The Incredible Hulk” எதிர்பார்த்த அள்வுக்கு நன்றாக இல்லை (பகலில் ஹல்க் சண்டை போடும் காட்சியைத்தவிர). இதற்கு முன் வெளியான ஹல்க் படத்தில் பலவகை கேமிரா கோனங்கள் ரசிக்க வைத்தன. இதில் அந்த நேர்த்தி மற்றும் வேகம் மிஸ்ஸிங்.

“Bolt” ஒரு அனிமேஷன் படம். குங்பூ பாண்டா ஏற்படுத்திய தாக்கம் அனிமேஷன் படங்கள் எனக்கு மிகப்பிடித்த ஒரு Genre-ஆக மாறிப்போனது. அனிமேஷன் படங்கள் பிடிக்கக் காரணமே அதில் இருக்கும் நையாண்டியான வசனங்கள்தான். போல்ட் ஒரு காமெடி படமானாலும் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஒருமுறை பார்க்கலாம்

இணையவேகம்:

நான் எனது கைபேசியில் மாதம் ரூ.100 செலுத்தி 2ஜிபி பெறும் இணைய வசதி வைத்துள்ளேன். நகரத்தில் இருப்பதாலும் அதிகம் எழுத்து சார்ந்த அப்ளிகேஷன்களை உபயோகிப்பதாலும் EDGE கனெக்‌ஷனின் வேகம்(~100Kbps) போதுமானதாக இருந்தது. .

ஆனால் நகரை விட்டு வெளியே செல்ல நேர்கையில் இணைய வேகம் Kmphr-லிருந்து Cmphr-ஆக மாறத்தொடங்கி விடுகிறது. அலைபேசியில் EDGE என்று காண்பித்தாலும் வேகம் எடுக்க என்னவோ மிகவும் தள்ளாடுகிறது இணையம். இம்முறை மிகவும் எரிச்சலாகி கஸ்டமர் கேருக்கும் அலைத்தேன். அவர்களின் ஒரே பதில் EDGE-ன் இணைய வேகம் 10kbps-கிழ்தான் இருக்குமாம். அப்போ GPRS-ன் வேகம் என்ன என்று கேட்டதற்கு அவரிடம் பதிலே இல்லை. பின் அவர் எனக்கு 3ஜி இணையத்தைப் பரிந்துரைத்தார். நான் இருக்கும் நகரில் 3ஜி டவர் இருக்கிறதா என்று அவரிடம் விசாரித்தேன். இல்லை என்றார். பின் எப்படி எனக்கு பரிந்துரைக்கிறீர்கள் என்று கேட்டதறகு மெளனமே பதிலானது.

இணையவேகம் பற்றி இணையத்தில்(அலுவலகத்தில்) தேடியபோது கிடைத்த தகவல்.

இந்தியாவை பொருத்தவரை இருக்கவேண்டிய இணையவேகம்

EDGE – average 135Kbps

GPRS – average 35Kbps

இணையம் என்பது இன்றியமையாததாக ஆகிவிட்ட இக்காலத்தில், (இந்தியாவில் மட்டும்) இணைய வசதியை ஏற்படுத்துவதில் நாம் இன்னும் கற்காலத்தில்தான் இருக்கிறோம்.

புத்தகம்:

சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்கள் ஊரில் இருந்தன. இந்த முறை ஊருக்கு சென்ற பொழுது மின் தடையின் பலனாக (பகலில் மட்டும்) புத்தகம் படிக்க முடிந்தது. அப்படி படித்தது தான் கிழக்குப் பதிப்பகத்தாரின் திரு. ஆர். முத்துக்குமார் எழுதிய ”மகா அலெக்ஸாண்டர்

978-81-8368-637-2_b-500x500

அலெக்சாண்டரின் வரலாறு எளிய நடையில், சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. ஆங்காங்கே சில நேரங்களில் தடம் மாறினாலும் அலெக்சாண்டரைப் பற்றி எல்லா விஷயங்களும் சொல்கிறார். 160 பக்கங்களில் அலெக்சாண்டரின் வாழ்க்கை, வீரம், போர்முறை, அரிஸ்டாடில், மாசிடோனியா, பிலிப் எல்லாரையும் பற்றியும் சொல்வதென்றால் கடினம்தான். இந்த புத்தகத்தைப் படிக்கும்பொழுது கிரேக்க நாகரீகத்திற்கு கிளாடியேட்டர்/300 படமும், அலெக்சாண்டராக ரசல்குரோவும் மனதில் தோன்றியவண்ணம் இருந்தார்கள்

Saturday, April 21, 2012

கலக்கி (22/04/2012)

 

தமிழ் சினிமா:

சிவகார்த்திகேயன் – காமெடியை ரசிக்கும் நண்பர்களுக்கு நிச்சயமாக பரிச்சயமான ஒரு முகம். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமாகி இன்று தமிழ் நாட்டையே தன் டைமிங் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரபலம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இவரும் சந்தானமும் ஒரு சிறந்த உதாரணம்.

siva-karthikeyan-03

இவர்களை வளர்த்து விட்டதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதை மற்ற டிவி ஆன்கர்களின் திரைவளர்ச்சியிலேயே நாம் பார்த்துவிடலாம். டைமிங்காமெடியில் அசத்துவதற்கு இவருக்கு நிகர் இவரே. நான் அடிக்கடி பார்த்து சிரிக்கும் இவரது காமெடி உங்களுக்காக…

 

 

ஹாலிவுட் சினிமா: 

இந்த வாரம் பார்த்த படம் "Sherlock Holmes 2 - A Game of Shadows". இது ஷெர்லாக் ஹோம்ஸின் இரண்டாவது படம். முதல் படத்தை விட இது இன்னும் சிறப்பாக உள்ளது. நிச்சயம் பார்க்க வேண்டிய படம். ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் அந்த கதையில் வரும் கேரக்டர்களின் குணாதிசயங்களை பிரபல பதிவர் திரு.கருந்தேள் வெகு சிறப்பாக விவரித்துள்ளார். அதைப் படிக்க இந்த சுட்டியை அழுத்தவும்

Sherlock Holmes 2: A Game of Shadows (2011) – English

Sherlock Holmes 2:A Game of Shadows (2011) - Part2

இவர் விவரித்துள்ள விஷயத்தை படிக்கும் பொழுது நம் கணேஷ் வசந்த் ஜோடி ஞாபகத்துக்கு வருகிறார்கள். இதுவும் அது போல கிரைம் நாவல் அல்லது சிறு கதைதான். நேரம் இருந்தால் படிக்கணும்.

அடுத்ததாக பார்க்க எண்ணியிருக்கும் படம் “Money Ball”. ஆறு பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். ஒரு பேஸ்பால் குழுவின் மேலாளராக இருக்கும் பில்லிபீன் (பிராட்பிட்), தங்களுக்கு கொடுத்துருக்கும் பட்ஜெட்டில் ஒரு கணிணி உதவியாளருடன் சேர்ந்து எப்படி ஆட்டக்காரர்களை எடுக்கிறார் என்பது பற்றியது.

 

திருவிழா:

சித்திரை தொடங்கிவிட்டாலே மதுரையில் விழாக்காலம் ஆரம்பித்துவிடும். தமிழகத்தின் முக்கியமான திருவிழாவான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் சித்திரைத் திருவிழா அடுத்த வாரம் தொடங்க இருக்கிறது. அதன் நிகழ்ச்சி நிரலை கீழே இணைத்துள்ளேன்.
மதுரை நகரமாகிவிட்டதாலும், மற்றும் சில பாதுகாப்பு காரணங்களாலும் வைகை ஆற்றில் நான்கு நாட்கள் நடந்து கொண்டிருந்த திருவிழா இப்பொழுது இரண்டு நாளில் முடிந்து விடுகிறது. ஆனால் வைகை ஆற்றங்கரையில் இருக்கும் வேறு சில ஊர்களில் இன்னும் அந்த திருவிழா ஆற்று மணலில் பெளர்ணமி நிலவில் நான்கு நாட்கள் நடந்து கொண்டுதானிருக்கிறது.
மதுரை சித்திரை திருவிழா 2012 – நிகழ்ச்சி நிரல்
23-04-12 - திங்கள் - சித்திரை திருவிழா கொடியேற்றம்
26-04-12 - வியாழன் - தங்க பல்லாக்கு
28-04-12 - சனி - ரிஷப வாஹனம்
30-04-12 - திங்கள் - ஸ்ரீ மீனாக்ஷி பட்டாபிஷேகம்
01-05-12 - செவ்வாய் - ஸ்ரீ மீனாக்ஷி திக்விஜயம்
02-05-12 - புதன் - ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்
02-05-12 - புதன் - புஷ்பா பல்லாக்கு
03-05-12 - வியாழன் - திரு தேர் தேரோட்டம் கள்ளழகர்
05-05-12 - சனி - தல்லாகுளத்தில் எதிர் சேவை
06-05-12 - ஞாயிறு - ஸ்ரீ கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருரல்
08-05-12 - செவ்வாய் - கள்ளழகர் புஷ்பா பல்லாக்கு

Monday, April 16, 2012

கலக்கி (15/04/2012)

சினிமா:

இந்த வாரம் பார்த்த படம் ”ஒரு கல் ஒரு கண்ணாடி”(OKOK)., சந்தானம் புகுந்து விளையாடுகிறார்., இது அவருடைய படம் என்று சொல்ல எல்லா தகுதியும் உண்டு (சந்தானத்தின் அறிமுக காட்சியில் தியேட்டரில் எழுந்த கைதட்டல்களே இதற்கு சாட்சி). உதயநிதி ஸ்டாலின் ஒரு நல்ல சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாக செய்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு விழாவில் விக்ரமன் சொன்னது சரி என்றே தோன்றுகிறது. இசையமைப்பாளருக்கு கோடிக்கணக்கில் அள்ளித்தருவதை வீண். இதற்கு பதில் பாலச்சந்தர் சார் கேளடி கண்மணி படத்தில் செய்ததைப் போல் செய்து விடலாம் (ராஜா வேறு படத்தில் பிஸியாக இருந்ததால் இளையராஜாவின் இசைக் கோர்வையை பிண்ணனிக்கு தக்கவாறு அவரே பயன்படுத்தி ரிக்கார்டிங் செய்தது). ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அட்டர் வேஸ்ட்.

பில்லா-2 படத்தின் டீஸர் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. “என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிசத்தையும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்குனதுடா!!!”. நிச்சயம் மங்காத்தா அளவு பெரிய ஓப்பனிங் இந்த படத்துக்கும் இருக்கும்.

ஹாலிவுட் சினிமா:

நண்பனின் பரிந்துரையின் பேரில் பார்த்த படம் “Full Metal Jacket”. வியட்நாம் போருக்காக தயார்படுத்தப்படும் வீரர்கள் பற்றிய படம். அவர்கள் மனதில் தங்களது பணி, எதிரியை கொல்வதே என்ற இலக்கை எப்படி விதைக்கிறார்கள் என்று பற்றி சொல்கிறார்கள். வசனங்களின் கெட்டவார்த்தைகளின் நெடி மிக அதிகம். எனக்கு இந்த படத்தில் மிகப்பிடித்த வசனம் (வியட்நாம் போர்களத்தில் ஒரு வீரர் பேசுவது) “I wanted to see exotic Vietnam, the crown jewel of Southeast Asia. I wanted to meet interesting and stimulating people of an ancient culture... and kill them”

புது விஷயம்:

ஜானி படத்தில் வரும் என் வானிலே பாடலை இதுவரை ஜென்சி பாடியதென்று நினைத்திருந்தேன். நேற்று ஃபேஸ்புக்கில் “தெரிந்த சினிமா தெரியாத விஷயம்” பக்கத்தில் அது பாடகி சுஜாதாவின் முதல் பாடல் என்று போட்டிருந்தார்கள். ராஜா சார் இரண்டு பேரையும் பாட வைத்து இரு தடவை ரெக்கார்டிங் பண்ணாரா ? படத்தில் இடம்பெறுவது யாருடைய பாடல், விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். கீழே இருக்கும் வீடியோவில் வரும் குரல் சுஜாதா அவர்களின் குரல் போலுள்ளது.

கிரிக்கெட்:

ஐபிஎல் ஆரவரமாக நடந்து கொண்டிருக்கிறது. முன்பு போல் வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பு இல்லாமல் நிறைய இந்திய புதுமுகங்கள் கலக்கிக் கொண்டிருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம். 20-20 உலகக் கோப்பை வரப்போகும் நிலையில் ராஹானே, ஓ.சா, ஹர்மீட் சிங், அகர்வால் போன்ற இளரத்தங்கள் கலக்கிக் கொண்டிருப்பது அவர்களை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணியாக நிச்சயம் அமையும்.