Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Wednesday, October 20, 2010

மகாபாரதம் பேசுகிறது – சோ

MP

போன புத்தகக்கண்காட்சியில் திரு. சோ அவர்கள் எழுதிய மகாபாரதம் பேசுகிறது புத்தகத்தை வாங்கி வைத்திருந்தேன். இப்போது தான் படிக்க ஆரம்பித்துள்ளேன். மகாபாரதத்தில் நிறைய சுவாரசியமான விஷயங்கள் சொல்லப்படுகின்றன.

எனது சிறு வயதில் டிடியில் மகாபாரதம் தொடரை ஒளிபரப்புவார்கள். அப்பொழுது அது வெறுக்கத்தக்க விஷயமாக இருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் எங்கள் வீட்டுப் பெரியோர்கள் அந்த ஒரு மணிநேர தொடரை பார்த்து விட்டு, அவர்களின் நண்பர்களுடன் அதைப் பற்றி விவாதங்களில் ஈடுபடுவதைக் கண்டுள்ளேன். அப்பொழுது மகாபாரதம் என்ன அவ்வளவு சுவாரசியமானதா என்று எண்ணம் தோன்றும். ராமாயணத்தைப் போல் இல்லாமல் இதில் நிறைய சிறு கதைகளும் நிறைய வித்தியாசமான கதாபாத்திரங்களும் இருக்கின்றன.

சோ அவர்கள் கதை சொல்லும் விதம் ஒரு ஃபிக்ஸன் கதையைப் படிப்பது போன்ற உணர்வை ஏற்ப்படுத்துகிறது. நிறைய சிறுசிறு விஷயங்கள் சொல்லப்படுகின்றன. நேற்று படித்துக் கொண்டிருக்கும் போது அறிந்து கொண்டது, ஒருவன் தனது 14-வது வயது வரை செய்யும் பாவங்கள் அவனைச்சேராது என்பது. இது இப்போதுள்ள நடைமுறைக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை.

இந்த மாதிரி சிறு விஷயங்களைத்திரட்டி சீக்கிரம் ஒரு பதிவாக இட முயல்கிறேன்.

Thursday, August 19, 2010

சுஜாதாவின் கொலையுதிர் காலம்

kolaiyuthirkaalam

பெட்டிகளில் முடங்கி கிடந்த சுஜாதா-வையும் சேத்தன் பகத்தையும் வெளியில் எடுத்தாகி விட்டது. சென்ற புத்தகக் கண்காட்சியில் வாங்கிய சில புத்தகங்கள் இன்னும் படிக்காமல் பணியிடம் மாற்றத்தினால் பெட்டிகளிலேயே முடங்கிக் கிடந்தன. அதை சென்ற வாரம் வெளியில் எடுத்துப் படிக்கத் தொடங்கினேன். முதலில் எடுத்த புத்தகம் “கொலையுதிர் காலம்”, சுஜாதா என்பதுகளில் எழுதி விற்பனையில் சக்கை போடு போட்ட நாவல் என்று கேள்விப்பட்டு அதன் புதிய பதிப்பை வாங்கியிருந்தேன். சுஜாதாவின் ஆஸ்தான கதாபாத்திரங்களாகிய கணேஷ், வசந்த் இதிலும் இருந்தனர். கதை ஆரம்பமான சில அதியாயங்களிலேயே வேகம் எடுக்க ஆரம்பிக்கிறது. இறுதி வரை விஞ்ஞானமும், பைசாசமும் சம பலத்தில் பயணித்தது மிகவும் நன்றாய் இருந்தது. கிரைம் கதைகளை விரும்பிப் படிக்கும் நண்பர்களுக்குக் கண்டிப்பாகப் பிடிக்கும்.

Wednesday, June 23, 2010

5S - ஓரு ஜப்பானிய வழிமுறை

fives_b

சென்னை புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்களில் நான் முதலில் படிக்க எடுத்தது இந்த புத்தகத்தைத் தான். இந்த புத்தகம் ஜப்பான் நாட்டின் ராக்கேட் வேக வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கின்ற 5S வழிமுறையின் தொகுப்பு என்று சொல்லியவுடன் இந்த புத்தகத்தை வாங்கி விட்டேன். படிக்க மிக ஆர்வமாய் இருந்தது. இந்த வழிமுறையை இப்போது உலகெங்கும் பயன்படுத்த துவங்கி இருக்கின்றனர் என்பதும், இந்த வழிமுறையை நாம் நம் வீட்டிலும் பயன்படுத்தலாம் என்ற செய்தியும் என் ஆர்வத்தை மேலும் அதிகரித்து.

ஜப்பான் நாட்டினரிடம் மட்டும் அப்படி என்னதான் இருக்கிறது. அவர்களால் மட்டும் எப்படி இவ்வளவு ஆற்றலை வெளிப்படுத்த முடிகிறது. அவர்களும் நம்மைப் போல் மனிதர்கள்தானே என்று நாம் நினைப்பதுண்டு. அவர்கள் தங்கள் ஆற்றலை மிகவும் அவசியமானவற்றில் மட்டுமே செலவிடுகின்றனர். சில வேலைகளை தினப்படி செய்வதின் மூலம் அவர்களுடைய ஆற்றல் தேவையில்லாதவற்றில் செலவிட நேர்ந்தால் உடனே அதை திட்டமிட்டு சரி செய்கின்றனர். அந்த தேவையில்லாத வேலைகள் திரும்ப நேராதபடி பார்த்துக் கொள்கின்றனர். இதன் மூலம் தேவையானவற்றில் மட்டும் அவர்களுடய கவனம் செல்கின்றது.

இந்த புத்தகத்தில் அப்படிப்பட்ட வழிமுறைகளை தெளிவாகவும், சுலபமாக புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதி இருக்கிறார் திரு. சிபி கே சாலமன்.

கிழக்குப் பதிப்பகத்தின் வெளியீடான இந்த புத்தகத்தை வாங்க இங்கே கிளிக்கவும்...

Saturday, June 20, 2009

கதை நாயகர்கள்

ஓரு கதை, நாவல் படிக்கும் பொழுது நிச்சயமாக எல்லோரும் அதில் வரும் கதாபாத்திரங்களை எந்த நடிகர்களோடவாது ஒப்பிட்டு அந்த கதையை படிப்பதுண்டு. பொன்னியின் செல்வன் படிக்கும் பொழுது அதில் வரும் சில முக்கிய கதாபாத்திரங்களை நமது நடிகர்களோடு ஒப்பிட்டு பார்த்ததில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

வல்லவராயன் வந்தியதேவன் - கமல்

அருள்மொழிவர்மர் - சிவகுமார்

குந்தவை - லட்சுமி (ராஜராஜ சோழன் படத்தால்)

வானதி - தேவிகா

பெரிய பழுவேட்டயர் - ரங்காராவ்

நந்தினி - ?

இங்கே என்னால் பழைய நடிகர்களையே குறிப்பிட முடிந்தது. அதற்க்காக இப்போதுள்ள நடிகர்களில் திறமையானவர்கள் இல்லாமல் இல்லை. இப்பொழுது வரலாறுகளை மைய்யமாக வைத்து திரைப்படங்கள் வருவதில்லை என்பதே.

Sunday, May 17, 2009

மூன்று விரல்

moondru_viral_b

மூன்று விரல் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த 5 நாளில் முடித்து விட்டாலும் இன்று தான் இந்த புத்தகத்தை பற்றி எழுத முடிந்தது.

மென்பொருள் தொழில் சார்ந்தவர்களைப் பற்றி சாதாரண மொழி நடையில் எழுதியிருப்பது படிப்பதற்கு மிகவும் எளிதாக இருந்தது. திரு. சுஜாதா அவர்களைப் போல கதாபாத்திரங்கள் நேரிலும், மனதிலும் பேசும் மறுமொழிகள் அருமை. சுதர்சன் (கதாநாயகன்) அல்லாமல், ராஜேந்திரன், சந்தியா, புஷ்பா, ராவ் போன்ற கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.

கதையின் முடிவு கடைசி ஒரு சில அதியாயங்களில் மாறியது எதிர்பாராதது.

இந்த நாவல், திரு. இரா.முருகன் அவரிகளின் இதர படைப்புகளை தேடவைத்தது. இதன் தொடர்ச்சியாக அரசூர் வம்சம், 40- இரட்டை தெரு என்ற இரண்டு நாவல்களையும் வாங்கி விட்டேன்.

படித்து முடித்ததும் என்னுடைய கருத்துகளை பரிமாரிக் கொள்கிறேன்.

டிஸ்கி:

முன்று விரல் புத்தகத்தைப் பற்றி வலைப்பூ நண்பர்கள் எழுதிய கருத்துக்களை படித்த பின் இந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

ஆமா, அதென்ன மூன்றுவிரல் அப்படீன்னு கேக்குரவங்களுக்கு,

Ctrl + Alt + Del  - இதை இயக்க மூன்று விரல் தேவை படுகிறது. இதற்கு மேலும் விவரம் தெரிய வேண்டுமானால் கதையை படிங்கப்பா !!!

Tuesday, April 21, 2009

மூன்று விரல் - புத்தகம்

8183680739

”மென்பொருள் துறை சார்ந்து தமிழில் வெளியாகும் முதல் நாவல்” என்ற அடைப்புக்குள் இருக்கும் வார்த்தையை பார்த்தவுடன் இந்த நாவலில் அப்படி என்ன தான் நான் இருக்கும் துறையை பற்றி எழுத்தாளர் சொல்லியிருக்கிறார் என்று அறிந்து கொள்ள நினைத்தேன். பின்பு இந்த புத்தகத்தை பற்றி சக வலைப்பூ நண்பர்கள் அளித்த விமர்சனங்களை(எழுத்தாளரை திரு.சுஜாதா அவர்களின் வாரிசு என்று குறிப்பிட்டுருந்தது) படித்த பின் இந்த புத்தகத்தை படிக்க மேலும் ஆர்வம் அதிகரித்தது.

நேற்று இந்த புத்தகத்தை வாங்கி படிக்க ஆரம்பித்துவிட்டேன். வெகு சீக்கிரத்திலேயே படித்து முடித்து விடுவேன் என்று தோன்றுகிறது.

கூடிய விரைவில் இந்த புத்தகத்தை பற்றி எழுதுகிறேன்.

Tuesday, April 14, 2009

பொன்னியின் செல்வன்

நான் இப்போது படித்துக் கொண்டிருக்கும் தமிழ் புத்தகம் - அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன்.

அவர் எழுதிய பார்த்திபன் கனவு புத்தகத்தை படித்து முடித்த பின் அவர் எழுத்துக்களின் மீது கொண்ட ஆர்வத்தினால் இப்போது இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன்.

இந்த புத்தகம் 5 பாகங்களை கொண்ட ஒரு பெரிய படைப்பாகும்.

பார்த்திபன் கனவு படிப்பதற்கு முன் இந்த புத்தகத்தை வாங்கி விட்டபடியால், முதலில் இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன். முதல் பாகம் படிக்கும் பொழுது இதன் மீது அவ்வளவாக ஆர்வம் எனக்கு ஏற்படவில்லை. சிரிய புத்தகங்களேயே படித்து பழக்கப்பட்ட எனக்கு இப்பெரும் படைப்பை படிக்க சற்று சோம்பேரித்தனமாகத்தான் இருந்தது. அதனால் நான் படிக்க ஆரம்பித்த முதல் நான்கு நாட்களிலே என் ஆர்வம் குறைந்து படிப்பதை பாதியிலேயே விட்டு விட்டேன்.

பார்த்திபன் கனவு புத்தகம் சிரியதாக இருந்ததால், அதை என்னால் சுலபமாக படிக்க முடிந்தது. கல்கி அவர்களின் எழுத்துக்களை படிக்கும் பொழுது என்னை அறியாமலேயே வரலாறுகளின் மீது எனக்கு மிக்க ஆர்வம் ஏற்பட தொடங்கியது.

இப்போது அந்த ஆர்வத்தின் தொடர்ச்சியாக பொன்னியின் செல்வன் வரலாற்றுப்புதினத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். (இந்த பதிப்பை எழுதும் போது நான் நான்காம் பாகத்தின் இறுதியில் இருக்கிறேன்). கதைக் கள அமைப்பும் அவர் விவரிக்கும் பாங்கும் மிகவும் நேர்த்தியாக இருக்கிறது. நண்பர்களுக்கு நேரமிருந்தால் இந்த புத்தகத்தை வாங்கி படிக்கவும்.

பொன்னியின்_செல்வன்