Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Monday, April 13, 2009

49 O என்னும் பிரம்மாஸ்திரம்...

ballot_box_2

கடந்த மூன்று வாரங்களாக திரு.  ஞானி அவர்கள், தன்னுடய ஓ பக்கங்களில் வலியுறுத்தி வரும் 49 ஓ என்னும் வேட்பாளர் நிராகரிப்பு ஓட்டை வாக்கு சாவடிகளில் எப்படி பதிவு வேண்டும் என்பதைப் பற்றிய பதிவு.

”வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்லவேண்டும். உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே  நோட்டில், அந்தக் கையெழுத்தின்  பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இதுதான் 49 ஓவைப் பதிவு செய்யும் முறை.

இதைச் செய்யக் கூடாது என்று நம்மை யாரும் & சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரதிநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.

தனியே போய் சாவடியில் பகிரங்கமாக 49 ஓ பதிவு செய்ய தயக்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வாக்குச் சாவடியில் 49ஓ பதிவு செய்ய விரும்பும் இதர நண்பர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் சந்தித்து ஒன்றாகப் போய் வரிசையில் நின்று 49 ஓ பதிவு செய்யுங்கள்.”

தேர்தலில் நிற்க்கும் வேட்பாளர்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள், தயவு செய்து வீட்டிலேயே முடங்கி இருக்காமல், தவறாமல் 49 ஓ பதிவு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

மிக்க நன்றி - திரு.  ஞானி அவர்கள் அவர்களுக்கு.

இதைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள

http://www.gnani.net/

Monday, October 20, 2008

என்று தணியும் இந்த மின்சார தாகம்...

 

                              Electric_transmission_lines.resize

அந்த் செய்தியை கேட்டு மிகவும் மனம் நொந்து போனேன்.

600 யுனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தால் 50% அதிகமாக மின்சார கட்டணம் செலுத்த வேண்டுமாம். 600 யுனிட் என்பது ஒரு வீட்டிற்கு மிகவும் அதிகமான பயன்பாடுதான் ஆனால் அதற்கு 50% அபராதம் என்பது மிக மிக அதிகமான அபராத தொகையாகும்.

இப்படி பட்ட அபராதத்தை விதிக்கும் முன் நமது முதல்வர் சிறிது நேரம் யோசிக்க வேண்டாமா ? அல்லது மின்சாரத்தை சிக்கனமாக பயன் படுத்துவதற்கு அவர் ஒரு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டாமா ?

அவர் தலைமை தாங்கும் விழாக்களுக்கு செலவாகும் மின்சாரத்தை சேமித்தாலே ஒரு சிறிய தொழிற்சாலைக்கு ஒரு நாளூக்கு தேவையான மின்சாரத்தை எடுத்துவிடலாம்.

சென்னையில் எதனையோ மேம்பாலங்கள் கட்டபடுகின்றன, அதற்கெல்லாம் இரவில் திறப்பு விழா வைப்பதைவிட பகலில் வைக்கலாமே ?

திறப்பு விழாக்கள் வைக்காமல் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அதே போல் இந்த மாதிரி பொது விழாக்களுக்கு செலவாகும் அதிகபடியான மின்சாரத்திற்கு அபராதம் விதிக்கலாமே.

நமது முதல்வரோ, மின்சார அமைச்சரோ இதைப் பற்றி கொஞ்சம் சிந்திப்பார்களா ???

Monday, October 6, 2008

எதாச்சும் செய்யணும் சார்..



சமிபத்தில் சன் டிவி யில் சிவப்பதிகாரம் படம் பார்க்க நேர்ந்தது. அந்த படத்தின் முடிவாக ஒரு கேள்வி ரசிகர்களாகிய நம்மிடம் கேட்க படும். அது தேர்தலில் நிற்க என்ன தகுதி வேண்டும் என்பதுதான்.

தற்போது தேர்தலில் நிற்க வயது மட்டுமே ஒரு தகுதியாக கருத படுகிறது என்று அந்த படத்தில் வரும் கதாநாயகன் சொல்வார். தேர்தலில் நிற்க வயது சரியாக இருந்தால் மட்டும் போதுமா ??? (அவரின் மீது எந்த விதமான கிரிமினல் கேஸ்கள் இருக்க கூடாது என்றும் ஒரு சட்டம் இருக்கிறது.)

இந்த தகுதிகள் மட்டும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு போதுமா எனபதே என் கேள்வி ? அந்த படத்தில் சொல்வது போல் சில சட்டங்களை ஏன் கொண்டு வரமுடியாது ???

அந்த படத்தில் சொல்லப்படும், நடை முறை சிக்கல் இல்லாத சில வழிகள் என நான் கருதுபவை

  • ஒவ்வொரு தேர்தல் வாக்கு சீட்டிலும் அசோக சக்கரத்தை ஒரு பொது சின்னமாக வைக்க வேண்டும். அந்த சின்னத்திற்கு அதிக வாக்குகள் விழுந்தால், அந்த மாவட்டத்தின் கலெக்டர் அவர்களே மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்க பட வேண்டும்.
  • MLA ஆகா வேண்டும் என்றால், இரண்டு முறை நகராச்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும், இரண்டு முறை MLA ஆக இருந்தால் மந்திரி ஆகலாம். இரண்டு முறை மந்திரி ஆக இருந்தால் மட்டுமே முதல் மந்திரி ஆக தகுதி பெறுவார்
  • ஒருவர் இரண்டு முறைக்கு மேல் முதல் மந்திரி ஆக முடியாது
  • தேர்தலில் நிற்க TNPSC தேர்வில் நல்ல மதிப்பேன் எடுக்க வேண்டும்
  • ஒட்டு போடுவதை கட்டாயமாக்குதல்

இப்படி போன்ற நல்ல சட்டங்களை நம்மால் வெகு சுலபமாக கொண்டு வர முடியும். ஆனால் நமது அரியணையில் இருப்பவர்கள் தம்மை பாதிப்பது போன்ற எந்த ஒரு சட்டத்தையும் இயற்ற மாட்டார்கள்.

இது போன்ற சட்டங்களை கொண்டு வர நாம எதாச்சும் செய்யனும் சார்...

பி.கு

நடைமுறை படுத்தக்கூடிய நல்ல தேர்தல் விதிமுறைகளை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்

இது போன்ற சட்டங்கள் நடைமுறை படுத்தபட்டால், வடிவேல் போன்றவர்கள் தங்கள் தனிமனிதவிருப்பு வெறுப்புகளுக்கு எல்லாம் தேர்தலில் நின்று ஜெய்பேன் என்று சபதம் விட முடியாதல்லவா ???