சமிபத்தில் சன் டிவி யில் சிவப்பதிகாரம் படம் பார்க்க நேர்ந்தது. அந்த படத்தின் முடிவாக ஒரு கேள்வி ரசிகர்களாகிய நம்மிடம் கேட்க படும். அது தேர்தலில் நிற்க என்ன தகுதி வேண்டும் என்பதுதான்.
தற்போது தேர்தலில் நிற்க வயது மட்டுமே ஒரு தகுதியாக கருத படுகிறது என்று அந்த படத்தில் வரும் கதாநாயகன் சொல்வார். தேர்தலில் நிற்க வயது சரியாக இருந்தால் மட்டும் போதுமா ??? (அவரின் மீது எந்த விதமான கிரிமினல் கேஸ்கள் இருக்க கூடாது என்றும் ஒரு சட்டம் இருக்கிறது.)
இந்த தகுதிகள் மட்டும் ஒரு மக்கள் பிரதிநிதிக்கு போதுமா எனபதே என் கேள்வி ? அந்த படத்தில் சொல்வது போல் சில சட்டங்களை ஏன் கொண்டு வரமுடியாது ???
அந்த படத்தில் சொல்லப்படும், நடை முறை சிக்கல் இல்லாத சில வழிகள் என நான் கருதுபவை
- ஒவ்வொரு தேர்தல் வாக்கு சீட்டிலும் அசோக சக்கரத்தை ஒரு பொது சின்னமாக வைக்க வேண்டும். அந்த சின்னத்திற்கு அதிக வாக்குகள் விழுந்தால், அந்த மாவட்டத்தின் கலெக்டர் அவர்களே மக்கள் பிரதிநிதியாக தேர்தெடுக்க பட வேண்டும்.
- MLA ஆகா வேண்டும் என்றால், இரண்டு முறை நகராச்சி தேர்தலில் வெற்றி பெற்றிருக்க வேண்டும், இரண்டு முறை MLA ஆக இருந்தால் மந்திரி ஆகலாம். இரண்டு முறை மந்திரி ஆக இருந்தால் மட்டுமே முதல் மந்திரி ஆக தகுதி பெறுவார்
- ஒருவர் இரண்டு முறைக்கு மேல் முதல் மந்திரி ஆக முடியாது
- தேர்தலில் நிற்க TNPSC தேர்வில் நல்ல மதிப்பேன் எடுக்க வேண்டும்
- ஒட்டு போடுவதை கட்டாயமாக்குதல்
இப்படி போன்ற நல்ல சட்டங்களை நம்மால் வெகு சுலபமாக கொண்டு வர முடியும். ஆனால் நமது அரியணையில் இருப்பவர்கள் தம்மை பாதிப்பது போன்ற எந்த ஒரு சட்டத்தையும் இயற்ற மாட்டார்கள்.
இது போன்ற சட்டங்களை கொண்டு வர நாம எதாச்சும் செய்யனும் சார்...
பி.கு
நடைமுறை படுத்தக்கூடிய நல்ல தேர்தல் விதிமுறைகளை உங்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்
இது போன்ற சட்டங்கள் நடைமுறை படுத்தபட்டால், வடிவேல் போன்றவர்கள் தங்கள் தனிமனிதவிருப்பு வெறுப்புகளுக்கு எல்லாம் தேர்தலில் நின்று ஜெய்பேன் என்று சபதம் விட முடியாதல்லவா ???
ஓட்டு போடும் பொழுது,கை விரல் ரேகை ஸ்கேன் செய்வதன் மூலம் கள்ள ஓட்டை தவிர்க்க முடியும்
ReplyDeleteசாகுல்
துபாய்
///இப்படி போன்ற நல்ல சட்டங்களை நம்மால் வெகு சுலபமாக கொண்டு வர முடியும். ஆனால் நமது அரியணையில் இருப்பவர்கள் தம்மை பாதிப்பது போன்ற எந்த ஒரு சட்டத்தையும் இயற்ற மாட்டார்கள்///
ReplyDeleteகுறைந்தது இரண்டு தமிழ் படத்திலாவது நடித்திருக்க வேண்டும்
என்று சட்டம் இயற்றினால் வரவேற்பார்கள.
பல நாடுகளில் உள்ளது போல நம் நாட்டிலும் மத்திய மற்றும் மாநில அளவில் இரு கட்சிகள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற நிலைகூட நல்லதொரு விஷயம். இதன் மூலம், சாதிக்கொன்று, மதத்திற்கொன்று என பல கட்சிகள் உருவாகாமல் இருக்கும்.
ReplyDeleteவேட்பு மனு தாக்கல் செய்யும் அனைவரும் கட்டாயம் முந்தைய ஆண்டுகளில் வருமான வரி கட்டி இருத்தல் வேண்டும். அவர்களின் சொத்து குறித்து தாக்கல் செய்யப்படும் விபரங்கள் யாவும் உளவுத் துறையினரால் ஆய்வு செய்யப்பட வேண்டும்.
குறைந்த பட்சம் ஒரு இளநிலை பட்டமாவது பெற்றிருத்தல் வேண்டும்.
துறை சார்ந்த அமைச்சர்கள் தத்தம் துறை சார்ந்த படிப்பை கட்டாயம் படித்திருத்தல் வேண்டும், அல்லது குறைந்த பட்சம் அதில் 5 ஆண்டு கால அனுபவம் வேண்டும்.
60/65 வயதிற்கு மேலுள்ள எவரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது.
வாரிசுகள் என்பதால் எவருக்கும் பதவியளிப்பு என்பது கூடாது. தேர்தலில் நின்று வெற்றி பெற்றவர்கள் மட்டுமே அமைச்சர்களாகவும் / ராஜ்ய சபை உறுப்பினர்களாகவும் முடியும்.
Happy to see "Public relation" topic in your blog.
ReplyDeleteGood Concept. That's true, our political leader won't allow to implement these laws.
Happy to see "Public Relation" issues in your blog.
ReplyDeleteGood concept. But our political leaders won't allow implement these laws.
Happy to see "Public Issues and Relations" in your blog.
ReplyDeleteGood concept. But our political leaders won't allow to implements these concepts.