Showing posts with label மென்பொருள். Show all posts
Showing posts with label மென்பொருள். Show all posts

Friday, May 4, 2012

iPhone – என் போன் – 2 (Reeder)

இந்த பதிவுல நான் சொல்லப்போறது Reeder(இது தாங்க கரெக்ட் ஸ்பெல்லிங்) என்கிற ஐபோன் அப்ளிகேஷனைப் பற்றி. இது நான் தினம் பயன்படுத்தும் ஒரு ஐபோன் அப்ளிகேஷன். இதனுடைய பயன்பாடு நம்முடைய கூகுள் ரீடரை ஐபோனுக்கு கொண்டுவருவதே. நீங்கள் அதிகம் கூகுள் ரீடரை உபயோகிப்பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கானது.

1

ss2

இதில் நாம் கூகுள் ரீடரில் பதிந்துள்ள அத்தனை வலைப்பூக்களையும் படிக்கலாம். சில தேவையில்லாத பதிவுகளை வலது புறம் ட்ராக் செய்வதின் மூலம் Mark as Read ஆக மாற்ற முடிவது மிக எளிதில் கையாளக்கூடிய வசதியாகும். பதிவுகளை இடது புறம் ட்ராக் செய்வதின் மூலம் Starred  கட்டளை பிறப்பிக்கலாம்.

நாம் நன்றாக இருக்கிறது என்று நினைக்கும் பதிவுகளை நம் நண்பர்களுக்கு டிவிட்டர்/ஃபேஸ்புக் மூலமாக பகிரலாம். இத்துடன் மேலும் சில வசதிகளும்(Read it later/Readability etc..,) இதில் உள்ளன.

இதன் முக்கிய உபயோகமாக நான் கருதுவது, நம்மிடம் எப்போதும் அதிவேக இணையம் இருக்கும் என்று சொல்ல முடியாது., நமக்கு அதிவேக இணையவசதி கிடைக்கும் பொழுது (பொதுவாக அலுவலகத்தில்) நாம் அன்றைய வலைப்பதிவுகளை தரவிறக்கும் செய்து, நமக்கு வீட்டில் (இணையவசதி இல்லாதிருப்பினும்) ஓய்வு நேரம் கிடைக்கும் போது படிக்க முடிகிறது.

இதன் விலை $2.99 (அதிகமாகத்தோன்றினாலும் உபயோகமான முதலீடு)

iTunes சுட்டி

Monday, April 16, 2012

iPhone – என் போன்–1 (Tweetbot)

நான் ஐ-போன் வாங்கி ஒரு வருடம் ஆகப்போகின்றது. முதல் ஐ-போன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வாங்க வேண்டும் ஒரு ஆவல் மனதில் எழுந்தாலும் நிறைவேறியதோ ஐ-போன் 4வது பதிப்பில்தான். அதுவும் மிகுந்த யோசனைகளுக்குப்பின்னரே வாங்கினேன். இதுநாள் வரையில் இவ்வளவு விலை கொடுத்து ஒரு போனை வாங்கிவிட்டோமே என்ற நினைப்பு, கவலை, வருத்தம் வரவில்லை. அதற்கு முழுமுதற்காரணம் ஐ-போன்களில் உள்ள அப்ளிகேஷன்கள்.

ip5(1)

ஐ-போனின் ஒவ்வொரு அப்ளிகேஷன்களின் வடிவைப்பும், அதன் பயன்பாடுகளும், தினம் தோன்றும் புதுவகை அப்ளிகேசன்களும், ஒவ்வொரு அப்டேட்டிலும் அவர்கள் கொடுக்கும் புது சிறப்புகளும், நாளுக்கு நாள் ஐ-போன்களை புதிதாக்கிக் கொண்டிருக்கிறதேயொழிய பழைய பயன்பாட்டை மட்டுமே வைத்துக் கொண்டு நம்மை சோர்வுறவைக்கவில்லை.

இது போன்ற விஷயங்கள் ஆன்ராய்டிலும் இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறிய உதாரணம். ஐபோன் உபயோகிப்பது விண்டோசை உபயோகிப்பது போல் மிகவும் எளிது ஆனால் ஆன்ராய்ட் லினக்ஸ் போன்றது கம்பியுட்டர் வல்லுநர்களையே தடுமாறவைப்பது. ஐபோன் உபயோகிப்பதில் விண்டோசைப் போன்றதே தவிர அதனிலுள்ள மென்பொருளானது மிகவும் தேர்ந்தது.

ஆனால் இந்த பதிவு ஐபோன் பெரிதா, ஆன்ராய்ட் பெரிதா என்பது பற்றியல்ல. அதனால், விஷயத்துக்கு வருவோம், நான் முன்பே குறிப்பிட்டது போல், ஐபோனின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதற்காக வடிவமைக்கப்படும் அப்ளிகேஷன்கள். நான் கடந்த ஒரு வருட காலமாக நிறைய அப்ளிகேஷன்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதை தங்களுடன் பகிரவே இந்த பதிவு.

இந்த முதல் பதிவில் நான் பகிரவிருக்கும் அப்ளிக்கேஷன் டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு. அதன் பெயர் டிவிட்பாட்(Tweetbot - http://tapbots.com/software/tweetbot/)

screenshot_02

இந்த அப்ளிக்கேஷன் டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றது. டிவிட்டரில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் இரண்டு அல்லது மூன்று டச்களின்மூலம் இதில் நாம் செய்யமுடிவது இதன் தனிப்பெரும் தன்மை. இது டிவிட்டர் இலவசமாக கொடுக்கும் நேடிவ் டிவிட்டர் அப்ளிகேசனை விட எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும்., குறைவான இணைய வேகத்திலும் எளிதில் டிவிட்டக் கூடியதாகவும் இருக்கின்றது.

டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் மிகவும் பயன்படுத்தக் கூடியதான லிஸ்ட்(lists) பயன்பாடு இதில் அதன் மேலுள்ள டைம்லைனை கிளிக் செய்வதின் மூலம் நாம் வேறு லிஸ்ட்டின் டைம்லைனில் மாறமுடிகிறது. இதன் விலை 2.99$. சிலருக்கு அதிகமாகத்தோன்றினாலும் இதில் உள்ள பயன்பாட்டுக்கு ஏற்றவிலைதான். சிலநேரங்களில் 0.99$க்கும் கிடைக்கிறது ஆனால் எப்பொழுது என்று சரியாக சொல்ல முடிவதில்லை.

டிஸ்கி:

இங்கு பகிரப்படும் அப்ளிகேஷன்கள் நான் பயன்படுத்திய பின்னர் எனக்கு உபயோகமுள்ளதாகக் கருதுவதால் மட்டுமே பகிரப்படுகிறது. நீங்க வாங்கி உங்களுக்கு பிடித்தலும் பிடிக்காமல் போவதற்க்கும் கம்பேனி பொருப்பல்ல Winking smile

Thursday, December 31, 2009

Expense Organizer v2.0




சில பக் (bug) சரி செய்யப்பட்டு இந்த மென்பொருளின் மறுபதிப்பை வெளியிட்டுள்ளேன். நண்பர்கள் உபயோகப்படுத்திவிட்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்.

Expense2

Download Expense_Organizer_v2_0

Wednesday, December 9, 2009

உங்கள் செலவுகளை ஆரய ஒரு இலவச மென்பொருள்

நாம் சம்பாதிக்கும் பணத்தை நல்ல வகையில் செலவு செய்வதும், நமக்கு வருமானம் ஏற்படுத்திக் கொடுக்கும் சிறந்த முதலீட்டு முறைகளில் முதலீடு செய்வதும் நிறைய நண்பர்கள் செய்ய நினைக்கும் செயல். என்னைப் பொருத்தவரை, நாம் செலவு செய்யும் செலவினங்களை எழுதி வைப்பதின் மூலம் தேவையற்ற செலவுகளை நாம் குறைக்கலாம். மென்பொருள் துறையில் இருந்து கொண்டு இதை மிகவும் எளிதான முறையில் செய்ய விளைந்ததின் பயனே இந்த Expense Organizer v1.0 மென்பொருள். நண்பர்கள் இதை உபயோகப்படுத்தி தங்கள் கருத்துகளை இங்கே சொல்லவும்

expense

இந்த கோப்பை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்.

Download Expense_Organizer_ver_1_0