நான் ஐ-போன் வாங்கி ஒரு வருடம் ஆகப்போகின்றது. முதல் ஐ-போன் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து வாங்க வேண்டும் ஒரு ஆவல் மனதில் எழுந்தாலும் நிறைவேறியதோ ஐ-போன் 4வது பதிப்பில்தான். அதுவும் மிகுந்த யோசனைகளுக்குப்பின்னரே வாங்கினேன். இதுநாள் வரையில் இவ்வளவு விலை கொடுத்து ஒரு போனை வாங்கிவிட்டோமே என்ற நினைப்பு, கவலை, வருத்தம் வரவில்லை. அதற்கு முழுமுதற்காரணம் ஐ-போன்களில் உள்ள அப்ளிகேஷன்கள்.
ஐ-போனின் ஒவ்வொரு அப்ளிகேஷன்களின் வடிவைப்பும், அதன் பயன்பாடுகளும், தினம் தோன்றும் புதுவகை அப்ளிகேசன்களும், ஒவ்வொரு அப்டேட்டிலும் அவர்கள் கொடுக்கும் புது சிறப்புகளும், நாளுக்கு நாள் ஐ-போன்களை புதிதாக்கிக் கொண்டிருக்கிறதேயொழிய பழைய பயன்பாட்டை மட்டுமே வைத்துக் கொண்டு நம்மை சோர்வுறவைக்கவில்லை.
இது போன்ற விஷயங்கள் ஆன்ராய்டிலும் இருக்கிறதே என்று நினைப்பவர்களுக்கு ஒரு சிறிய உதாரணம். ஐபோன் உபயோகிப்பது விண்டோசை உபயோகிப்பது போல் மிகவும் எளிது ஆனால் ஆன்ராய்ட் லினக்ஸ் போன்றது கம்பியுட்டர் வல்லுநர்களையே தடுமாறவைப்பது. ஐபோன் உபயோகிப்பதில் விண்டோசைப் போன்றதே தவிர அதனிலுள்ள மென்பொருளானது மிகவும் தேர்ந்தது.
ஆனால் இந்த பதிவு ஐபோன் பெரிதா, ஆன்ராய்ட் பெரிதா என்பது பற்றியல்ல. அதனால், விஷயத்துக்கு வருவோம், நான் முன்பே குறிப்பிட்டது போல், ஐபோனின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதற்காக வடிவமைக்கப்படும் அப்ளிகேஷன்கள். நான் கடந்த ஒரு வருட காலமாக நிறைய அப்ளிகேஷன்களை உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதை தங்களுடன் பகிரவே இந்த பதிவு.
இந்த முதல் பதிவில் நான் பகிரவிருக்கும் அப்ளிக்கேஷன் டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு. அதன் பெயர் டிவிட்பாட்(Tweetbot - http://tapbots.com/software/tweetbot/)
இந்த அப்ளிக்கேஷன் டிவிட்டர் பயன்பாட்டாளர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கின்றது. டிவிட்டரில் உள்ள அத்தனை சிறப்பம்சங்களையும் இரண்டு அல்லது மூன்று டச்களின்மூலம் இதில் நாம் செய்யமுடிவது இதன் தனிப்பெரும் தன்மை. இது டிவிட்டர் இலவசமாக கொடுக்கும் நேடிவ் டிவிட்டர் அப்ளிகேசனை விட எளிதில் பயன்படுத்தக்கூடியதாகவும்., குறைவான இணைய வேகத்திலும் எளிதில் டிவிட்டக் கூடியதாகவும் இருக்கின்றது.
டிவிட்டர் பயன்பாட்டாளர்கள் மிகவும் பயன்படுத்தக் கூடியதான லிஸ்ட்(lists) பயன்பாடு இதில் அதன் மேலுள்ள டைம்லைனை கிளிக் செய்வதின் மூலம் நாம் வேறு லிஸ்ட்டின் டைம்லைனில் மாறமுடிகிறது. இதன் விலை 2.99$. சிலருக்கு அதிகமாகத்தோன்றினாலும் இதில் உள்ள பயன்பாட்டுக்கு ஏற்றவிலைதான். சிலநேரங்களில் 0.99$க்கும் கிடைக்கிறது ஆனால் எப்பொழுது என்று சரியாக சொல்ல முடிவதில்லை.
டிஸ்கி:
இங்கு பகிரப்படும் அப்ளிகேஷன்கள் நான் பயன்படுத்திய பின்னர் எனக்கு உபயோகமுள்ளதாகக் கருதுவதால் மட்டுமே பகிரப்படுகிறது. நீங்க வாங்கி உங்களுக்கு பிடித்தலும் பிடிக்காமல் போவதற்க்கும் கம்பேனி பொருப்பல்ல
No comments:
Post a Comment