தமிழ் சினிமா:
சிவகார்த்திகேயன் – காமெடியை ரசிக்கும் நண்பர்களுக்கு நிச்சயமாக பரிச்சயமான ஒரு முகம். விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் பிரபலமாகி இன்று தமிழ் நாட்டையே தன் டைமிங் காமெடியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஒரு பிரபலம். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு இவரும் சந்தானமும் ஒரு சிறந்த உதாரணம்.
இவர்களை வளர்த்து விட்டதில் விஜய் டிவிக்கு முக்கிய பங்கு இருக்கிறது. இதை மற்ற டிவி ஆன்கர்களின் திரைவளர்ச்சியிலேயே நாம் பார்த்துவிடலாம். டைமிங்காமெடியில் அசத்துவதற்கு இவருக்கு நிகர் இவரே. நான் அடிக்கடி பார்த்து சிரிக்கும் இவரது காமெடி உங்களுக்காக…
ஹாலிவுட் சினிமா:
இந்த வாரம் பார்த்த படம் "Sherlock Holmes 2 - A Game of Shadows". இது ஷெர்லாக் ஹோம்ஸின் இரண்டாவது படம். முதல் படத்தை விட இது இன்னும் சிறப்பாக உள்ளது. நிச்சயம் பார்க்க வேண்டிய படம். ஷெர்லாக் ஹோம்ஸ் மற்றும் அந்த கதையில் வரும் கேரக்டர்களின் குணாதிசயங்களை பிரபல பதிவர் திரு.கருந்தேள் வெகு சிறப்பாக விவரித்துள்ளார். அதைப் படிக்க இந்த சுட்டியை அழுத்தவும்
Sherlock Holmes 2: A Game of Shadows (2011) – English
Sherlock Holmes 2:A Game of Shadows (2011) - Part2
இவர் விவரித்துள்ள விஷயத்தை படிக்கும் பொழுது நம் கணேஷ் வசந்த் ஜோடி ஞாபகத்துக்கு வருகிறார்கள். இதுவும் அது போல கிரைம் நாவல் அல்லது சிறு கதைதான். நேரம் இருந்தால் படிக்கணும்.
அடுத்ததாக பார்க்க எண்ணியிருக்கும் படம் “Money Ball”. ஆறு பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட படம். ஒரு பேஸ்பால் குழுவின் மேலாளராக இருக்கும் பில்லிபீன் (பிராட்பிட்), தங்களுக்கு கொடுத்துருக்கும் பட்ஜெட்டில் ஒரு கணிணி உதவியாளருடன் சேர்ந்து எப்படி ஆட்டக்காரர்களை எடுக்கிறார் என்பது பற்றியது.
கலக்கி தலைப்பிற்கேற்றாற் போல, ஆன்மீகத் தகவல் மற்றும் சினிமாத் தகவல் என கலக்கலாக இருக்கின்றது. அருமை தோழர்.!
ReplyDeleteநன்றி அட்சயா !!! உங்களைப் போன்றோர்களின் ஆதரவு என்னை மேலும் எழுத தூண்டும்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete