Showing posts with label அறிவியலாளர்கள். Show all posts
Showing posts with label அறிவியலாளர்கள். Show all posts

Wednesday, July 9, 2008

அறிவியலாளர்கள்

அலெக்சாண்டர் கிரகாம் பெல்



அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரதுதாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர்உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டுதொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின்நிறுவனரும் ஆவார். அலெக்சாண்டர் பெல் எடின்பேர்க், ஸ்கொட்லாந்தில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார்

அல்பர்ட் ஐன்ஸ்டீன்

அல்பர்ட் ஐன்ஸ்டீன் ( Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை ( Relativity theory) முன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை (quantum mechanics), புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் ( Photo electric effect ) கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் ( Theoretical physics ) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டீன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட ரைம் ( இதழ் ), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

உபயம்: விக்கிபீடியா