Monday, April 16, 2012

கலக்கி (15/04/2012)

சினிமா:

இந்த வாரம் பார்த்த படம் ”ஒரு கல் ஒரு கண்ணாடி”(OKOK)., சந்தானம் புகுந்து விளையாடுகிறார்., இது அவருடைய படம் என்று சொல்ல எல்லா தகுதியும் உண்டு (சந்தானத்தின் அறிமுக காட்சியில் தியேட்டரில் எழுந்த கைதட்டல்களே இதற்கு சாட்சி). உதயநிதி ஸ்டாலின் ஒரு நல்ல சப்போர்ட்டிங் ஆர்டிஸ்டாக செய்திருக்கிறார்.

சமீபத்தில் ஒரு விழாவில் விக்ரமன் சொன்னது சரி என்றே தோன்றுகிறது. இசையமைப்பாளருக்கு கோடிக்கணக்கில் அள்ளித்தருவதை வீண். இதற்கு பதில் பாலச்சந்தர் சார் கேளடி கண்மணி படத்தில் செய்ததைப் போல் செய்து விடலாம் (ராஜா வேறு படத்தில் பிஸியாக இருந்ததால் இளையராஜாவின் இசைக் கோர்வையை பிண்ணனிக்கு தக்கவாறு அவரே பயன்படுத்தி ரிக்கார்டிங் செய்தது). ஹாரிஸ் ஜெயராஜின் பாடல்கள் அட்டர் வேஸ்ட்.

பில்லா-2 படத்தின் டீஸர் வெளியிட்டு இருக்கிறார்கள். ஆரம்பமே அசத்தலாக இருக்கிறது. “என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிசத்தையும் ஏன் ஒவ்வொரு நொடியையும் நானே செதுக்குனதுடா!!!”. நிச்சயம் மங்காத்தா அளவு பெரிய ஓப்பனிங் இந்த படத்துக்கும் இருக்கும்.

ஹாலிவுட் சினிமா:

நண்பனின் பரிந்துரையின் பேரில் பார்த்த படம் “Full Metal Jacket”. வியட்நாம் போருக்காக தயார்படுத்தப்படும் வீரர்கள் பற்றிய படம். அவர்கள் மனதில் தங்களது பணி, எதிரியை கொல்வதே என்ற இலக்கை எப்படி விதைக்கிறார்கள் என்று பற்றி சொல்கிறார்கள். வசனங்களின் கெட்டவார்த்தைகளின் நெடி மிக அதிகம். எனக்கு இந்த படத்தில் மிகப்பிடித்த வசனம் (வியட்நாம் போர்களத்தில் ஒரு வீரர் பேசுவது) “I wanted to see exotic Vietnam, the crown jewel of Southeast Asia. I wanted to meet interesting and stimulating people of an ancient culture... and kill them”

புது விஷயம்:

ஜானி படத்தில் வரும் என் வானிலே பாடலை இதுவரை ஜென்சி பாடியதென்று நினைத்திருந்தேன். நேற்று ஃபேஸ்புக்கில் “தெரிந்த சினிமா தெரியாத விஷயம்” பக்கத்தில் அது பாடகி சுஜாதாவின் முதல் பாடல் என்று போட்டிருந்தார்கள். ராஜா சார் இரண்டு பேரையும் பாட வைத்து இரு தடவை ரெக்கார்டிங் பண்ணாரா ? படத்தில் இடம்பெறுவது யாருடைய பாடல், விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும். கீழே இருக்கும் வீடியோவில் வரும் குரல் சுஜாதா அவர்களின் குரல் போலுள்ளது.

கிரிக்கெட்:

ஐபிஎல் ஆரவரமாக நடந்து கொண்டிருக்கிறது. முன்பு போல் வெளிநாட்டவரின் ஆக்கிரமிப்பு இல்லாமல் நிறைய இந்திய புதுமுகங்கள் கலக்கிக் கொண்டிருப்பது இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல விஷயம். 20-20 உலகக் கோப்பை வரப்போகும் நிலையில் ராஹானே, ஓ.சா, ஹர்மீட் சிங், அகர்வால் போன்ற இளரத்தங்கள் கலக்கிக் கொண்டிருப்பது அவர்களை அடுத்த உயரத்திற்கு அழைத்துச் செல்லும் ஏணியாக நிச்சயம் அமையும்.

2 comments: