Thursday, July 24, 2008

இனிமையான நிமிடங்கள்...



வாழ்கையில் சிறந்த சில நிமிடங்கள்

  1. முதல் மாத சம்பளத்தை பத்திரமாக பெற்றோரிடம் கொடுக்கும் அந்த நிமிடம்
  2. தோற்ற காதலையும், காதலியையும் எண்ணி கண் கலங்கும் சில நிமிடம்
  3. பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தும் புகை படங்களை பார்த்து சிரிக்கும் நிமிடங்கள்
  4. என்றும் பசுமையான நமது பள்ளி மற்றும் கல்லூரி கனா காலங்களை நினைவு கூறும் நிமிடங்கள்
  5. நண்பர்களுடன், நம்மை மறந்து கலந்துரையாடும் இனிய நிமிடங்கள்
  6. நாம் வேண்டும் பொழுது பழைய துணிகளில் கிடைக்கும் சில ரூபாய் நோட்டுகள்
  7. காதலியின் கை கோர்த்து நடக்கும் நிமிடங்கள்
  8. நம் நலன் கருதும் நண்பரிடமிருந்து கிடைக்கும் சின்ன கட்டிபுடி வைத்யம்
  9. தன்னுடைய முதல் குழந்தைக்கு கொடுக்கும் முதல் முத்தம்
  10. மனம் விட்டு சிரிக்கும் பொழுது கண்களில் ஒரம் தோன்றும் கண்ணீர் துளி.
  11. தினமும் பார்க்கும் விஷயங்களை, திடீரென்று ரசித்து பார்க்கும் அந்த நிமிடம் !!!

Wednesday, July 9, 2008

அறிவியலாளர்கள்

அலெக்சாண்டர் கிரகாம் பெல்



அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell, மார்ச் 3, 1847 - ஆகஸ்ட் 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார். இவரதுதாயாரும் மனைவியும் செவிடராதலினால் இவரது ஆய்விற்கு இது ஓர்உந்துசக்தியாக அமைந்திருக்கலாம். இவரது ஆய்வுகள் ஊடாக 1876 ஆம் ஆண்டுதொலைபேசி உருவாக்கப்பட்டது. இவர் பெல் தொலைபேசி நிறுவனத்தின்நிறுவனரும் ஆவார். அலெக்சாண்டர் பெல் எடின்பேர்க், ஸ்கொட்லாந்தில் 3 மார்ச் 1847 ஆம் ஆண்டு பிறந்தார்

அல்பர்ட் ஐன்ஸ்டீன்

அல்பர்ட் ஐன்ஸ்டீன் ( Albert Einstein, மார்ச் 14, 1879 - ஏப்ரல் 18, 1955) குறிப்பிடத்தக்க பயன்பாட்டுக் கணிதத் திறமைகள் கொண்ட, ஒரு கோட்பாட்டு இயற்பியல் அறிஞர் ஆவார். இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான அறிவியலாளராகப் பொதுவாகக் கருதப்படுகிறார். இவர் புகழ்பெற்ற சார்புக் கோட்பாட்டை ( Relativity theory) முன்வைத்ததுடன், குவாண்டம் பொறிமுறை (quantum mechanics), புள்ளியியற் பொறிமுறை (statistical mechanics) மற்றும் அண்டவியல் ஆகிய துறைகளிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார். ஒளி மின் விளைவைக் ( Photo electric effect ) கண்டுபிடித்து விளக்கியமைக்காகவும், கோட்பாட்டு இயற்பியலில் ( Theoretical physics ) அவர் செய்த சேவைக்காகவும், 1921ல் இவருக்குப் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

தற்காலத்தில் பொதுப் பயன்பாட்டில் ஐன்ஸ்டீன் என்ற சொல், அதிக புத்திக்கூர்மையுள்ள ஒருவரைக் குறிக்கும் சொல்லாக மாறிவிட்டது. 1999 ல், புதிய ஆயிரவாண்டைக் குறித்து வெளியிடப்பட்ட ரைம் ( இதழ் ), "இந்த நூற்றாண்டின் சிறந்த மனிதர்" என்ற பெயரை ஐன்ஸ்டீனுக்கு வழங்கியது.

உபயம்: விக்கிபீடியா

2. நான் மாட கூடல் எனும் மதுரை

இந்தியாவில் உள்ள மிக பெரிய கோவில்களுள் ஒன்று மதுரை மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் கோவில். இது குலசேகர பாண்டியனால் கட்டப்பட்டது. ஆனால் அது இயற்கை சீற்றங்களால் சற்று அழிவுபெற்றது.

இப்போதுள்ள கோவில் விஸ்வநாத நாயகரால் வடிவம் பெற்று திருமலை நாயகரால் கட்ட பெற்றது. இந்த கோவிலை நான் மாடக்கூடல் என்று சொல்வர். நான்கு திசைகளிலும் நான்கு கோபுரங்கள் இருப்பதால் இத்தளம் இப்பெயர் பெற்றது. நான்கு திசைகளிலும் கோபுரங்களை முதன்மையாக கொண்டு ஆடி, சித்திரை, மாசி மற்றும் வெளி வீதி என்று மதுரை அந்த காலத்திலே மிகவும் திட்டமிட்டு கட்டப்பட்டதாகும்.


மதுரை கோவிலில் சுமார் 3.3 கோடி சிற்பங்கள் உண்டு என்று கணகிடபட்டுள்ளது. இப்பொழுதுள்ள கோவில் திராவிட கலாச்சாரத்தை அடிபடையாக கொண்டு கட்டப்பட்டதாகும். இக்கோவிலில் இப்பொழுது 12 உள் கோபுரங்கள் மற்றும் 4
உயரமான கோபுரங்கள் உள்ளன. அதனுள் தெற்கு திசையில் உள்ள கோபுரம் மிகவும் உயரமானது. இது 49 மீட்டர் உயரம் உடையது.

இக்கோவிலுள்ள அஷ்ட ஷக்தி மண்டபத்தில் திருவிளையாடல் புராணமும், மீனாக்ஷி அம்மன் மதுரை இளவரசியாக இருந்த புராணமும் சிற்பங்களாக வடிக்க பட்டுள்ளன. பொற்றாமரை குளம் மீனாக்ஷி அம்மனின் இடது புறம் அமைந்துள்ளது. இந்த குளத்தில்தான் நம் முன்னோர்கள் தமிழ் செய்யுள்களை மதிப்பீடு செய்தனர்.

செய்யுள்கள் எழுதி முடித்த பின்னர் அவை இக்குளத்தில் போடப்படும். மூழ்கியபின் மேலே மிதக்கும் சுவடுகளை தமிழில் சிறந்தது என்று கருதுவர். உலக பொதுமறையாம் திருக்குறள் இவ்வாறு மதிப்பீடு செய்தது என்று ஒரு வரலாறும் இங்கு நிலவுகிறது.

கோவிலின் மேற்கில் ஊஞ்சல் மண்டபமும், கிளி கூட்டு மண்டபமும் அமைந்துள்ளன. கிளி கூட்டு மண்டப்பத்தில் கிளிகள் மீனாக்ஷி தாயின் பெயரை உட்சரித்து கொண்டிருக்கும். வெள்ளிதோறும் ஊஞ்சல் மண்டபத்தில் மீனாக்ஷி தேவியின் உற்சவ சிலையை வைத்து பூஜ்ஜிப்பர்.

இந்திரன் சொக்கநாதரை பூஜித்த கடம்ப மரத்தின் கன்று இக்கோவிலில் இப்பொழுது காணலாம். கோவிலின் வெளி புறத்தில் கம்பத்தடி மண்டபமும் வெள்ளி அம்பலமும் அமைந்துள்ளன. மீனாக்ஷி சுந்தரேஷ்வரரின் திருமண காட்சியை இந்த மண்டபத்தில் சிற்பமாக வடித்துள்ளனர். சிவபெருமான் நாட்டியமாடும் ஐந்து மண்டபங்களில் இந்த வெள்ளி அம்பலமும் ஒன்று. (மற்ற நான்கு மண்டபங்கள்: சிதம்பரம், திருவாலங்காடு, திருநெல்வேலி மற்றும் குற்றாலம்).

இங்கு உள்ள நடராஜர் சிலை மேலும் சிறப்பு பெற்றது. இங்குள்ள நடராஜர் சிலை
வலது காலை தூக்கி ஆடும் விதமாக அமைய பெற்றுள்ளதே இதன் சிறப்பு அம்சமாகும். மன்னன் ராஜசேகர பாண்டியனின் வேண்டுகோளுக்கிணங்க நடராஜர் இப்படி ஆடியதாக கூறப்படுகிறது. நடராஜர் சிலை வெள்ளியால் செய்ய பெற்றுள்ளதால் இதற்கு வெள்ளி அம்பலம் என்று பெயர் வந்தது.


இங்கு அமைந்துள்ள ஆயிரம் கால் மண்டபம் மேலும் சிறப்பு பெற்றதாகும். இது 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த மண்டபத்தின் வெளியில் இசை எழுப்பும் தூண்கள் அமயபெற்றுள்ளன. இதை தட்டும் பொழுது வெவ்வேறு விதமான இசைகளை எழுப்பும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

இங்கு அமைத்துள்ள முக்குறுணி விநாயகர் சிலை, கோவிலுக்கு மூன்று கிலோ மீட்டர் தொலைவில், திருமலை நாயகர் கோவிலுக்காக குளம் வெட்டுகையில் தோண்டி எடுக்க பட்டது. இன்றும் இக்குளம் தெப்பகுளம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

இக்குளத்திற்கு என்று தனியாக விழாவும் நடக்கிறது. நான் மாட கூடலில் நாம் வியக்கும் வகையில் மேலும் சிறப்புகள் ஏராளமாக உள்ளன. அதை தொகுத்து அடுத்த பதிவில் வழங்குகிறேன்.

நன்றி

தொடரும்...

Tuesday, July 8, 2008

SMS கவிதைகள்



எதாவது புதுசா எழுதலாம்னு யோசிச்சுக்கிடுருந்தப்போ, என்னோட செல் பேசிக்கு வந்த கவிதைகளை மொத்தம்மா தொகுத்து போடலாம்னு தோனுச்சு (சொந்த சரக்கு இல்லன இப்படி எல்லாம் தோணும்னு யாரோ சொல்றது காதுல விழுகுது).

இதோ SMS-ல் சுட்ட கவிதைகள் உங்கள் பார்வைக்கு...

விரும்பும் நெஞ்சம்
அருகில் இருந்தாலென்ன
தொலைவில் இருந்தாலென்ன
தொலையாத நினைவுகள் உள்ளவரை
தொலைவும் மிக அருகில் தான்

கருவறையை விட்டு
கீழே இறங்கி
கல்லறையை நோக்கி
நடந்து செல்லும் தூரம்தான்
வாழ்க்கை

அடி பெண்ணே
குப்பை தொட்டியும்
என்னை காதலித்திருக்கும்
நீ கிழித்துப் போட்ட
என் கவிதைகளை அது படித்திருந்தால்

பிரிந்து செல்பவர்கள்
மனதை புரிந்து கொள்வதில்லை
மனதை புரிந்து கொண்டவர்கள்
பிரிந்து செல்வது இல்லை

Monday, July 7, 2008

காதலியின் நினைவில். . .

பாசம் என்று
நினைத்துதான் பழகினேன்
பிறகுதான் தெரிந்தது - நீ
என் சுவாசம் என்று.




கை சேராமல் நீ
காதல் கரை ஏறாமல் நான்
கரையும் கண்களுக்கு உன்
காதல் தந்த பரிசு,
விழிக்கும் வரையில் என்
விழிகளில் நீ.

மூடநம்பிக்கை




உனது எதிர்கால சாதனையை
உன் கை ரேகையில் தேடாதே
கையில்லா மனிதர்களும்
சாதித்து கொண்டிருக்கிறார்கள்
இவ்வுலகில் !!!

Saturday, July 5, 2008

முதியோர் இல்லம்



இது ஒரு மனித காட்சி சாலை
இங்கே மிருகங்கள் வந்து விட்டு போகின்றன
மனிதர்களை பார்க்க !!!