Saturday, June 20, 2009

பொன்னியின் செல்வன் - நிச்சயம் படிக்கவேண்டிய ஒரு புத்தகம்

ponniyin_selvan

பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதும் அளவிற்கு எனது எழுத்தறிவும் தமிழறிவும் உயர்ந்து விடவில்லை. அதனால் அதில் உள்ள நிறை குறைகளையோ, அந்த புத்தகத்தின் விமர்சனத்தை பற்றியோ பேச போவதில்லை (இப்படி சொல்லித்தான் தப்பிக்கணும்). பின்னே எதப்பத்தி பேச போரனு கேக்குறிங்களா. சொல்றேன்..

ஓரு பத்து திருக்குறளை நாம் படிக்க ஏக பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த புதினத்தை , அதுவும் சுமார் 5 பெரும் பகுதிகளையுடைய புத்தகத்தை படிக்க நம்மை தூண்டியது எது? நிச்சயமாக எந்த பகுதியிலும் குன்றாத அதன் சுவரிசயம் தான். புத்தகம் நெடுகிலும் நம்மை கதாபாத்திரங்களோடு உலாவ விட்டிருப்பது பெரும் ஆச்சர்யமான விஷயம்தான். ஒவ்வொரு கதா பாத்திரங்களையும் கண்முன் நிறுத்தி அவர்களை உருவகப்படுத்தி இந்த கதையை படிக்கும் பொழுது நம்மை சோழர்காலத்திற்க்கே கொண்டு செல்லகிறார் திரு கல்கி அவர்கள்.

இந்த புதினத்தை நமக்கு கொடுத்த திரு கல்கி அவரிகளுக்கு எனது கோடான கோடி வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

இந்த பதிவை படிக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் இந்த புத்தகத்தை படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.

டிஸ்கி:

இந்த பதிவை எழுதும் பொழுது சென்னை-ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். பதிவு எழுதி முடித்ததும் திரு கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் புத்தகத்தின் 3-ம் பாகத்தை படிக்க அந்த புத்தகத்தை என் அருகில் வைத்து இருந்தேன். அதை எடுத்துப் பார்த்த சக பிரயாணிகள்(50 வயதை தாண்டியவர்கள்) சம்பாசித்தது “இந்த புத்தகத்தை எடுத்துப் படிச்சா சீக்கிரம் தூக்கம் வரும்” என்று. பாவம் அவர்களுக்கு தெரியவில்லை படிப்பவருடய தூக்கத்தையும் மறக்கச் செய்யும் புத்தகம் இவைகள் என்று.

Sunday, May 17, 2009

மூன்று விரல்

moondru_viral_b

மூன்று விரல் புத்தகத்தை படிக்க ஆரம்பித்த 5 நாளில் முடித்து விட்டாலும் இன்று தான் இந்த புத்தகத்தை பற்றி எழுத முடிந்தது.

மென்பொருள் தொழில் சார்ந்தவர்களைப் பற்றி சாதாரண மொழி நடையில் எழுதியிருப்பது படிப்பதற்கு மிகவும் எளிதாக இருந்தது. திரு. சுஜாதா அவர்களைப் போல கதாபாத்திரங்கள் நேரிலும், மனதிலும் பேசும் மறுமொழிகள் அருமை. சுதர்சன் (கதாநாயகன்) அல்லாமல், ராஜேந்திரன், சந்தியா, புஷ்பா, ராவ் போன்ற கதாபாத்திரங்கள் மனதில் நிற்கின்றன.

கதையின் முடிவு கடைசி ஒரு சில அதியாயங்களில் மாறியது எதிர்பாராதது.

இந்த நாவல், திரு. இரா.முருகன் அவரிகளின் இதர படைப்புகளை தேடவைத்தது. இதன் தொடர்ச்சியாக அரசூர் வம்சம், 40- இரட்டை தெரு என்ற இரண்டு நாவல்களையும் வாங்கி விட்டேன்.

படித்து முடித்ததும் என்னுடைய கருத்துகளை பரிமாரிக் கொள்கிறேன்.

டிஸ்கி:

முன்று விரல் புத்தகத்தைப் பற்றி வலைப்பூ நண்பர்கள் எழுதிய கருத்துக்களை படித்த பின் இந்த புத்தகத்தை வாங்கி படித்தேன். நல்ல புத்தகங்களை பரிந்துரைக்கும் நண்பர்களுக்கு மிக்க நன்றி.

ஆமா, அதென்ன மூன்றுவிரல் அப்படீன்னு கேக்குரவங்களுக்கு,

Ctrl + Alt + Del  - இதை இயக்க மூன்று விரல் தேவை படுகிறது. இதற்கு மேலும் விவரம் தெரிய வேண்டுமானால் கதையை படிங்கப்பா !!!

சர்வம் - திரைப்பட அனுபவம்

401px-Sarvam_film

முதல் பாதி,

காக்க காக்க படத்திற்குப் பிறகு காதலை இத்தனை அழகாக காட்ட முடியுமா என்று வியந்த படம். காதலில் எந்த வித விரசமும் இல்லாமல், அழகான, பார்ப்பவர் மனதை லேசாக்குகிறது. ஆர்யாவுக்கும் திரிஷாவுக்கும் காதல் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒத்துப் போகிறது.

இரண்டாம் பாதி

முதல் பாதியின் மூலம் ஏற்பட்ட எதிர்பார்ப்பை நிறைவு செய்யவில்லை. மூணாறை மிகவும் அழகாக காட்டியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் படம் நன்றாகவே இருந்தது. நம்பி பார்க்கலாம்.

டிஸ்கி: குத்துப்பாட்டையும், பறக்கும் சண்டை காட்சிகளையும் விரும்பும் ரசிகர்களுக்கு சற்றும் ஒத்து வராத படம்.