பொன்னியின் செல்வன் புத்தகத்தைப் பற்றி விமர்சனம் எழுதும் அளவிற்கு எனது எழுத்தறிவும் தமிழறிவும் உயர்ந்து விடவில்லை. அதனால் அதில் உள்ள நிறை குறைகளையோ, அந்த புத்தகத்தின் விமர்சனத்தை பற்றியோ பேச போவதில்லை (இப்படி சொல்லித்தான் தப்பிக்கணும்). பின்னே எதப்பத்தி பேச போரனு கேக்குறிங்களா. சொல்றேன்..
ஓரு பத்து திருக்குறளை நாம் படிக்க ஏக பிரயத்தனம் செய்ய வேண்டி இருக்கிறது. ஆனால் வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கிய இந்த புதினத்தை , அதுவும் சுமார் 5 பெரும் பகுதிகளையுடைய புத்தகத்தை படிக்க நம்மை தூண்டியது எது? நிச்சயமாக எந்த பகுதியிலும் குன்றாத அதன் சுவரிசயம் தான். புத்தகம் நெடுகிலும் நம்மை கதாபாத்திரங்களோடு உலாவ விட்டிருப்பது பெரும் ஆச்சர்யமான விஷயம்தான். ஒவ்வொரு கதா பாத்திரங்களையும் கண்முன் நிறுத்தி அவர்களை உருவகப்படுத்தி இந்த கதையை படிக்கும் பொழுது நம்மை சோழர்காலத்திற்க்கே கொண்டு செல்லகிறார் திரு கல்கி அவர்கள்.
இந்த புதினத்தை நமக்கு கொடுத்த திரு கல்கி அவரிகளுக்கு எனது கோடான கோடி வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.
இந்த பதிவை படிக்கும் எனது நண்பர்கள் அனைவருக்கும் இந்த புத்தகத்தை படிக்குமாறு பரிந்துரைக்கிறேன். அனைவரும் நிச்சயம் படிக்க வேண்டிய புத்தகம்.
டிஸ்கி:
இந்த பதிவை எழுதும் பொழுது சென்னை-ராமேஸ்வரம் செல்லும் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். பதிவு எழுதி முடித்ததும் திரு கல்கி எழுதிய சிவகாமியின் சபதம் புத்தகத்தின் 3-ம் பாகத்தை படிக்க அந்த புத்தகத்தை என் அருகில் வைத்து இருந்தேன். அதை எடுத்துப் பார்த்த சக பிரயாணிகள்(50 வயதை தாண்டியவர்கள்) சம்பாசித்தது “இந்த புத்தகத்தை எடுத்துப் படிச்சா சீக்கிரம் தூக்கம் வரும்” என்று. பாவம் அவர்களுக்கு தெரியவில்லை படிப்பவருடய தூக்கத்தையும் மறக்கச் செய்யும் புத்தகம் இவைகள் என்று.
No comments:
Post a Comment