தற்பொழுது படங்களை அதிகமாக பார்க்க முடிவதில்லை. புதிதாக வந்த படங்களில், சில நாட்களாக பார்க்க நினைத்த மெதராஸப்பட்டினம் படத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை பார்க்க முடிந்தது. இந்த படத்தில் என் மனதைத் தொட்ட மூன்று விஷயங்கள், எமி, ஆர்யா மற்றும் மெதராஸப்பட்டினம் சென்ரல் ஸ்டேசன்.
எமி & ஆர்யா நடிப்பு வெகு இயல்பாக இருந்தது. சென்ரல் ஸ்டேசன் இப்படி இருந்ததா என்று ஆச்சர்ய படும் அளவுக்கு அது ஒரு கதாபாத்திரமாகவே படம் முழுக்க வந்தது. சென்னையும், கூவமும் எந்த அளவுக்கு பாழ்பட்டு போயிருக்கிறது என்பதை இந்த படத்தை பார்த்து தெரிந்து விடுகிறது.
படத்தில் இருக்கும் காட்சிகள் லகான், டைட்டானிக் படங்களை ஞாபகப்படுத்தினாலும், படம் அலுக்காமல் செல்கிறது. G.V இசையில் பூக்கள் பூக்கும் தருணம் பாடல் படம் முடிந்த பிறகும் காதுகளில் ரீங்காரமிடுகிறது. நிச்சயம் பார்க்க வேண்டிய படம் புதிதான பழைய சென்னைக்காக...
No comments:
Post a Comment