பணத்திற்கு மரணம் உண்டு, அனுபவத்திற்கு அல்ல.
நீங்கள் உங்கள் வாழ்நாள் முழுதும் படிக்க ஆன தொகை எவ்வளவு என்று உங்களால் கணக்கில் கொள்ள இயலாது.
ஆனால், உங்கள் வாழ்நாளில் பள்ளியிலும் கல்லூரியிலும் செலவிட்ட நிமிடங்களை திரும்ப உங்கள் நினைவுகளில் அசை போட முடியும்.
இன்னும் சில காலங்களுக்குப் பிறகு நீங்கள் செலவு செய்த மருத்துவ செலவுகளை மறந்து விடுவீர்கள்,
ஆனால் அதன் மூலம் உங்களுக்கு புதிதாகக் கிடைத்த உறவுகளூடன் நிங்கள் கொண்டாட போகும் நேரங்களை மறக்க மாட்டீர்கள்.
உங்கள் தேன் நிலவுக்கான செலவுகள் நினைவில் இல்லை என்றாலும்
அதன் மூலம் கிடைத்த அந்த காதல் நிச்சயம் உங்கள் நினைவில் இருந்து நீங்காதவை.
இப்படி எத்தனையோ அனுபவங்கள் உங்கள் வாழ்க்கையை சிறப்பிக்க இருக்கும் பொழுது பணத்திற்கு அதிக மதிப்பு கொடுக்க நினைக்க வேண்டாம்.
அழகான தலைப்பு, எழுதி இருப்பதும் அருமை!
ReplyDelete